தமிழ் முரசின் ‘வேட்டி சவால்’

நம் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றான வேட்டியைக்கொண்டு தமிழ் முரசு நாளிதழின் ஏற்பாட்டில் புதிய சவால் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. வேட்டியை அணிந்து நமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியும் என்பதைச் சித்திரிக்கும் சவால் இது. 
தமிழ்மொழி விழா நடைபெறும் இந்த ஏப்ரல் மாதத்தில், நமது பாரம்பரிய உடையை அணிய ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இச்சவால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கெடுக்க நீங் கள் செய்யவேண்டியது இதுதான். 
வேட்டியைக் கட்டிக்கொண்டு தனிநபராகவோ குழுவாகவோ ஒரு காணொளியைப் பதிவு செய்யவேண்டும். பின்னர் அதை #தமிழ்முரசுவேட்டிசவால் #tmvettichallenge ஹேஷ்டேக் குறியீடுகளுடன் உங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக் கத்தில் பதிவேற்றம் செய்து தமிழ் முரசு பக்கத்தை டேக் (tag) செய் யவும். உங்கள் காணொளியை 82983973 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக் கலாம். உங்கள் காணொளி 2 நிமிடங்களுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் பதிவேற்றம் செய்த காணொளியின் அனுமதி, பொது மக்கள் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.
இந்தச் சவாலில் முதல் நிலை யில் வெற்றிபெறுபவருக்கு $300 ரொக்கமும் இரண்டாவது பரிசாக $200 ரொக்கமும் மூன்றாவது பரிசாக $100 ரொக்கமும் வழங் கப்படும். இச்சவாலுக்கு ஸ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனம் பரிசளித்து ஆதரவளிக் கிறது. போட்டியின் இறுதி நாள் ஏப்ரல் 30ஆம் தேதி. சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு மட்டும் பரிசு கள் வழங்கப்படும்.
இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்கும் வகையில் தமிழ் முரசு செய்தியாளர்கள் ஒரு காணொளி யைத் தயாரித்துள்ளனர். அந்தக் காணொளியைத் தமிழ் முரசு ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் கண்டு மகிழலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon