தமிழ்மொழியும் செயற்கை நுண்ணறிவும் 

தாம் சண்முகம்

"முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்" என்ற குறள், கோட்டையை முற்றுகையிட்டும் முற்றுகை இடாமல் வெளியே இருந்து போர் செய்தும், கோட்டை மதில்களைச் சூழ்ச்சிகளால் துளைத்தும் இடித் தும் எப்படியும் பகைவரால் கைப் பற்ற முடியாத அருமை உடையது அரண் என்கிறது. அதுபோல இத்தகவல் தொழில்நுட்ப யுகத் தில் நம்மைக் காத்துக்கொள்வது இன்றியமையாத தேவையாக உள் ளது என்று 'அக்சென்ச்சர்' நிறு வனத்தில் பணிபுரியும் திரு கணேஷ் நாராயணன் குறிப்பிட் டார்.
முழுமைத் தற்காப்பில் ஆறாவ தாக மின்னிலக்க அரண் சேர்க் கப்பட்டிருப்பதாகவும் தனிமனி தருக்கும் அடிப்படை இணையப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தேவையென்பதும் இவரது கருத்து.
'தமிழ்மொழியும் செயற்கை நுண்ணறிவும்' என்ற தலைப்பில் நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த 'இளவேனில் 2.0' நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது, அதை எவ்வாறு நாம் தமிழ்மொழி கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் பயன் படுத்தி அடுத்த தலைமுறை யினருக்கு எடுத்துச்செல்லலாம் என்பதை விளக்கினார் திரு கணேஷ்.
தொழில்நுட்பத் துறை சார்ந்த நான்கு நிபுணர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட இவர், 'இணைய அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப் புணர்வு' என்ற தலைப்பில் அடை யாளத் திருட்டு, தீம்பொருள், கடவுச்சொல் திருட்டு போன் றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை விளக் கினார்.
பன்னாட்டு நிறுவனத்தில் தகவல் பகுப்பாய்வு துறையில் பணிபுரியும் திரு விக்ணேஷ்வர், 'செயற்கை நுண்ணறிவு வழி தமிழ்க் கல்வி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பன்னிரெண்டு வயதிற்கு உட் பட்ட மாணவர்கள் திரையின் முன் செலவிடும் நேரம் சராசரி யாக ஐம்பது விழுக்காட்டிற்கு மேலாக இருப்பதைச் சுட்டிய அவர், பாலர் பள்ளி குழந்தைகள் முதல் உயர்நிலைப்பள்ளி மாணவர் கள் வரை மூன்று கட்டங்களாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தமிழ் கற்றலைச் செயல் படுத்தும் யோசனையை முன் மொழிந்தார். தமிழில் ஒளி எழுத் துணரி (OCR) உருவாக்கம் கற் றலுக்குப் பெரிதும் பயன்படும் எனவும் இயந்திர வழிக் கற்றலைப் பயன்படுத்தி இயந்திரங்களை மனிதர்கள் போல் சிந்திக்க வைத்து மெய்நிகர் பயிற்சியும் மதிப்பீடும் செய்யலாம் என்பதை யும் விளக்கினார்.
'அன்றாட வாழ்வில் தமிழ் மொழியும் இயந்திரவழிக் கற்றலும்' என்ற தலைப்பில் பேசிய பிரஷாந்த் தங்கவேல் நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் இயந்திர வழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற் கொண்டுள்ளார்.
செயற்கை நரம்பணுப் பிணை யம் (Neural Network), மாதிரி வகை அறிதல் (Pattern Recognition) முதலியவற்றைப் பயன்படுத்திப் பிற்காலத்தில் ஒரு படத்தைப் பார்த்துக் கணினியைத் தமிழில் கதை சொல்ல வைக்கலாம் என்றார்.
செயற்கை நரம்பணுவியல் (Neuroscience), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning) ஆகிய துறைகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டுள்ள கணேஷ்குமார் 'செயற்கை நுண்ணறிவு: யார் குரு? யார் சிஷ்யன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கணினியில் எப்படி இயந்திர வழிக் கற்றலை, மாதிரி வகை அறிதல் (Pattern Recognition), செயற்கை நரம்பணுப் பிணையம் (Neural Network) வழி உரு வாக்குவது, அதன் மூலம் பன் னாட்டு இயல், இசை, நாடகங் களை இணைப்பது என்பது பற்றி விளக்கினார். மேலும் தமிழில் தரவுத்தொகுப்புகள் (Datasets) குறைவாக இருப்பதாகவும் நிலையை மேம்படுத்த பல முயற் சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த ஓராண்டாக ஒரு குழுவாக தாங்கள் சில ஆய் வுகளைச் செய்து வருவதாகவும் தமிழில் ஏற்கனவே இருக்கும் காப்பியங்களை வைத்துச் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய சிறுகதைகள் உருவாக்க வைக்கும் முயற்சியும் ஒன்று என் றார்.
நிகழ்ச்சியில் கலந்துரையாடல் அரங்கத்தில் பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நிபுணர் கள் பதிலளித்தனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் குறித்த கண் காட்சியும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
தேசிய கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் பட்டயக் கல்வி பயிலும் செல்வி அபிதா பேகம் புதிய தொழில்நுட்பங்கள் மாணவர் களுக்குத் தமிழை மகிழ்வூட்டும் விதத்தில் கற்றுக்கொடுக்க உத வும் எனவும் இத்தொழில்நுட்பத் தால் ஆசிரியர்களுக்கான தேவை குறையாது; மாறாக வேலை பளு குறையலாம், மாணவர்களுக்கான சிறப்புத் தேவைகளில் கவனம் செலுத்தி அவர்களை மேம்படுத்தப் பெரிதும் உதவலாம் என்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் பட்டபோது வரிகளுடன் சங்க நட வடிக்கைகளின்போது அமைந்த நிழற்படங்கள் திரையில் தோன் றியது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப் புச் சேர்த்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!