தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் நடத்திய உயர்நிலைப் பள்ளிகளுக்கான 'உணர்ச்சி' குறு நாடகப் போட்டியில் 'பட்டுக் கோட்டை ஒரு பாட்டுக்கோட்டை' எனும் தலைப்பில் நாடகம் படைத்து ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாம் பரிசை புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியும் மூன் றாம் பரிசை ரிவர்சைட் உயர் நிலைப் பள்ளியும் வென்றன. ஜூரோங் வெஸ்ட் பள்ளி மாணவி ஜொஹானா சிறந்த இளம் நடிகர் எனும் விருதைப் பெற்றார். இளைய தலைமுறை நாடகக் கலை ஆர்வலர்களை இலக்காகக் கொண்ட இந்தப் போட்டியில் குறுகிய காலத்தில் சிறப்பாக மாணவர்கள் நாடகங்களைத் தயாரித்துப் படைத்தனர் என்று கூறினார் கலைஞர் சங்கத் தலைவர் திரு குணசீலன். மார்ச் மாதம் தேர்வுச் சுற்றும் நாடகப் பட்டறைகளும் நடத்தப் பட்டன. சங்கத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி புகழ் நடிகர்கள் மணிமாலா, லிங்கம், வைஷ்ணவி முதலியோர் மாணவர்களுக்கு நடிப்புத் திறன் தொடர்பான நுணுக்கங்களைக் கற்பித்ததுடன் சிறந்த குழுக்களை இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கும் நடுவர்களாகவும் பணியாற்றினர். ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்ச் சிக்குப் பார் வையாளர்கள் சுமார் 100 பேர் வந்திருந்தனர். சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட, சிண்டா வின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு, நாடகங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறை தமிழ்மொழியின் பாலும் ஈர்க்கப் பட்டதைச் சுட்டிக் காட்டினார். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், வெற்றி பெறுவதை மட்டுமே முக்கியம் எனக் கரு தாமல் இந்தப் பங்கேற்பின் வழி கிடைக்கும் அனுபவத்தையும் கற் றலையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இறுதிப் போட்டிக்கு நடுவர் களாக பிரபல உள்ளூர் நடிகர் களான வடிவழகன், மஞ்சரி, கலைவாணி ஆகிய மூவரும் பணியாற்றினர்.
இளையரின் நடிப்பாற்றலுக்கு களம் அமைத்த 'உணர்ச்சி'
2 mins read
-

