ஆடம் சாலை உணவு நிலையத்தில் பரோட்டா விற்பவர் ஒருவர் இலவச மாக பரோட்டா கேட்கும் பழக்கம் அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது என நினைவுகூர்ந்தார். தமது தாத்தாவும் அப்பாவும் பரோட்டா விற்கும் தொழில் புரிந்தவர்கள் என்று கூறிய 27 வயது முகம்மது காலித், அவர்கள் வேலை செய்த காலத்தில் இது போன்று இலவசமாக உணவு கேட்டு வருபவர்களை அதிகளவில் சமாளிக்க வேண்டி இருந்தது எனக்கூறினார். "குண்டர் கும்பல் நடவடிக்கை கள் 1950ல் அதிகமாக இருந்தது. குண்டர் கும்பல்களைச் சேர்ந்த வர்கள் இலவசமாக பரோட்டா கேட்பார்கள். அந்தக் கும்பலின் வட்டாரத்தில் அந்தக் கடை இருப்பதால் கொடுத்தே ஆக வேண்டும். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் வரை இது சாதாரணமான ஒரு வழமையாக இருந்தது," என்று திரு காலித் தெரிவித்தார். சிறு வயதில் தாத்தாவையும் அப்பாவையும் பார்த்து, "ஏன் இவ் வளவு பெரிய மீசை வைத்திருக் கிறீர்கள்? அது உங்களைப் பயங் கரமாகக் காட்டுகிறது," என்று காலித் கேட்டதற்கு, அப்படி மீசை இருந்தால் பார்ப்பதற்கு குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்போல் இருக் கும். பயத்தை உண்டாக்கும். இலவசமாக உணவு கேட்பவர்களை எளிதில் சமாளிக்கலாம் என்று அவர்கள் சொன்னதாக திரு காலித் கூறினார். "இப்போதும் சிலர் இலவச உணவு கேட்டு வருவது உண்டு. அவர்கள் பெரும்பாலும் பணமோ, வேலையோ இல்லாதவர்கள். பாவப்பட்டு நம்மால் முடிந்ததைக் கொடுப்போம். எனினும், எது வேண்டுமானாலும் கொடுப்போம் என்று அவர்கள் எதிர்பார்க்க மாட் டார்கள்," என்றார் திரு காலித். "ஆனால் மது போதையுடன் இலவசமாக பரோட்டா கேட்டு உத்தரவிடுபவர்களை கண்டு கொள்வதில்லை," என்று அவர் உறுதியுடன் கூறினார். "இப்போது எவராவது இலவச மாக பரோட்டா கேட்டு மிரட்டினால் நான் அதிர்ச்சி அடைவேன். அது அன்றைய நிலைமை. சிங்கப்பூர் இப்போது அப்படி இல்லை. முறுக்கு மீசை வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை," என்றார் திரு காலித். svenga@sph.com.sg davidsun@sph.com.sg
பரோட்டா கேட்டு மிரட்டும் குண்டர் கும்பல் கலாசாரம்
2 mins read

