சவால்களை சமாளித்து சாதித்த மகளிருக்கு விருதுகள்

சவால்களை சமாளித்து சாதித்த மகளிருக்கு விருதுகள்

5 mins read
57db23ee-34be-4499-804c-3bb4d3fc815a
விருது பெற்ற (இடமிருந்து) ஜெயந்தி நடராஜூ, ராஜேந்திரன் ரஞ்சனி, சித்தி சஃப்ரின் ஃபாரா, கலைவாணி சுப்பிரமணியம். படம்: எஸ்பிஎச் -
multi-img1 of 2

மகள் பிறந்த மகிழ்ச்சியை முழு மையாக அனுபவிப்பதற்குள் தமது தந்தை இறந்ததால் பெரும் வேதனைக்குள்ளானார் ரஞ்சனி.

அச்சம்பவத்திலிருந்து குடும் பத்தினருக்கு ஆறுதலளித்து பக்க பலமாக இருக்க தீர்மானித்த ரஞ்சனி தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அந்த வருத்தத்திலிருந்து மெல்ல மீண்டு வந்தார்.

தந்தையின் இறப்புக்குப் பின் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிய தமது தாயாருக்கு ஆறுதலாக இருப்பதுடன் மகளையும் பரா மரிக்க வேண்டி இருந்தது.

வாழ்க்கையில் சிரமம் தெரி யாமல் தந்தை தன்னை வளர்த்தது போல தமது மகளை வளர்க்க விரும்பிய ரஞ்சனிக்கு அடுத்த சறுக்கல் காத்திருந்தது. திருமண வாழ்வில் சிக்கல். மிகுந்த போராட் டத்திற்குப் பிறகு 2011ஆம் ஆண்டில் கணவரைப் பிரிந்தார்.

என்றாலும் மகளைச் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தொடக்கத்தில் வர்த்தகத் துறையில் பணிபுரிந்த அவர் பிறகு சிறப்பு தேவையுள்ள பிள்ளைகளைக் கவனிக்கும் உதவி ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். 'நைட்டெக்' படிப்பை முடித்திருந்த அவர், சிறப்பு தேவையுடைய பிள்ளை களுக்கான ஆசிரியர் பயிற்சிப் படிப்பை மேற்கொண்டு, ஆசிரிய ராகப் பதவி உயர்வுபெற்றார்.

"வாழ்க்கையென்றால் சவால் கள் இருக்கவே செய்யும். அவற்றைச் சமாளித்து முன்னேற பெண்கள் ஆயத்தமாக வேண்டும் என்று கூறினார் 12 வயது மகளுக்குத் தாயான ரஞ்சனி.

இவருக்கு 'ஹர்க்யூலியன்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் பெண்கள் தொழில்முனைவோர் கட்டமைப்பு.

சாவல்களை எதிர்கொண்டு போராடி முன்னேறும் பெண்களுக்கு இந்த விருதுகள் தன்னம்பிக்கையை மேலும் வளர்க்கின்றன என்றார் 33 வயது ரஞ்சனி.

வாழ்க்கையில் பல சவால்களைச் சமாளித்து சுய முயற்சியால் முன்னேறியிருக்கும் ரஞ்சனி உட்பட ஐவருக்கு சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபை யின் 95வது ஆண்டு நிறைவில் விருதுகள் வழங்கப்பட்டன.

சென்ற வியாழக்கிழமை 'தி ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா' ஹோட்டலில் நடைபெற்ற விருது அளிப்பு நிகழ்ச்சியில் திருவாட்டி செண்பகவள்ளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, சித்தி சஃப்ரின் ஃபாரா ஜாஹிர் ஹூசேனுக்கு இளம் சாதனையாளர் விருது, கலைவாணி சுப்பிரமணி யத்துக்கு 'உமன் வித் ஏ ஹார்ட்' விருது, ஜெயந்தி நடராஜூவுக்கு சிறந்த பெண் தொழில்முனைவர் ஆகிய விருதுகளைப் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா வழங் கினார்.

இழப்பிலும் கல்வியில் சிறந்து விளங்கிய இளம் சாதனையாளர்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண நிலைத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த சித்தி சஃப்ரின் ஃபாரா, மாரடைப்பால் தந்தை திடீரென மரணமடைந்ததில் நிலை குலைந்து போனார்.

தாதியாக வேண்டும் என்ற வேட்கையில் விடாமுயற்சியுடன் படித்து வந்த ஃபாரா, தந்தையின் இழப்பு, துவண்டு போன தாயாரைப் பார்த்து தாம் முடங்கிபோய் விடக் கூடாது என உறுதிபூண்டார்.

வாழ்க்கையில் சாதித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியம் இவருக்குள் ஆழப்பதிந்தது.

ஒவ்வொரு நிமிடமும் தந்தையை நினைத்து அதை ஊக்கமாக படித்த அவர் சாதாரண நிலைத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றார்.

தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதியர் படிப்பில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இவர், தந்தையின் இறைச்சிக் கடையை நடத்தி வரும் தாயாருக்கு ஆதரவாக உள்ளார்.

படிப்பிலும் தொழிலிலும் சிறந்து முன்னேறி வரும் 18 வயது ஃபாரா, தமக்கு இளம் சாதனை யாளர் விருது கிடைத்தது எதிர் பார்க்காத ஒன்று என்றார்.

"முதன்முறையாக கொடுக்கப் படுகின்ற இவ்விருது எனக்குக் கிடைத்ததில் பெருமிதம் கொள் கிறேன். என்னைப் போன்ற இளை யர்களை ஊக்குவித்து வாழ்க் கையில் முன்னேறத் தூண்டும் இவ்விருதை அறிமுகப்படுத்திய ஏற்பாட்டுக் குழுவிற்கு நன்றி," என்று இவர் கூறினார்.

ஒரே நேரத்தில் படிப்பு, குடும்பம், வேலை: தொழில்முனைவர் வெற்றி

சிறந்த தொழில்முனைவோர் விருது பெற்ற மெல்பர்ன் நிபுணத் துவ அனைத்துலக பள்ளியின் நிறுவ னரும் இயக்குநருமான 50 வயது ஜெயந்தி நடராஜூ, உணவக உதவியாளராகப் பணியைத் தொடங்கியவர்.

இரு பிள்ளைகளுக்குத் தாயான திருமதி ஜெயந்தி, இலங் கையில் வசதி குறைந்தோருக்கும் உதவி தேவைப்படும் குழந்தைகள், பெண்களுக்கும் உதவும் வசந்தம் அறக்கட்டளையுடன் இலங்கையில் பாலர் பள்ளி ஒன்றைக் கட்டு வதற்கு ஆதரவளித்து வருகிறார்.

12 வயதில் தந்தையை இழந்த அவர், சிறு வயதிலேயே பொறுப்பு களைச் சுமக்கத் தொடங் கினார். 16 வயதில் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வேலைத் திறனுடன் கல்வித் திறனையும் வளர்த்துக் கொண்டார்.

வேலை பார்த்துக் கொண்டே படித்தார். தாயாருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் இவர் பக்க பலமாக உள்ளார்.

"பெண்களை வாழ்க்கையில் தைரியமாக நடைபோட ஊக்கு விக்கும் இந்த விருது, சிறப்பு தேவையுள்ள பிள்ளைகளுக்கும் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் பிள்ளை களுக்கும் தொடர்ந்து உதவி செய்ய எனக்கு தூண்டுதலாக அமைகிறது," என்றார் ஜெயந்தி.

சமூக சேவை, குடும்ப பொறுப்பில் சமநிலை காண்பவர்

வசந்தம் அறக்கட்டளைவழி இலங் கையின் உதவி தேவைப்படுவோ ருக்கு பல்வேறு வழிகளில் உதவி வரும் கலைவாணி சுப்பிர மணியம் 'உமன் வித் ஏ ஹார்ட்' விருதைப் பெற்றார்.

2004ல் சுனாமிப் பேரிடரில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு களில் ஒன்றான இலங்கைக்கு கலைவாணி செய்யத் தொடங்கிய சிறு உதவிகள் ஆலமரமாக வளர்ந்து வசந்தம் விஷன் அறக் கட்டளையாக இன்று பெண்கள் முன்னேற்றப் பணிகளை மேற் கொண்டு வருகிறது.

உள்நாட்டுப் போரினால் பாதிக் கப்பட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கல்வி மேம்பாட்டையும் பெண் வளர்ச்சியையும் மேம்படுத்து வதற்காக முயலும் இந்த லாப நோக்கமற்ற அமைப்பு, பெண்களுக் கான தற்காப்புப் பயிலரங்குகள், எழுத்தறிவு திட்டங்கள் போன்ற வற்றை நடத்தி வருகின்றன.

சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியரான கலை வாணி, குடும்ப பொறுப்பிலிருந்தும் தவறியதில்லை. ஆறு வயது இரட் டையர்களுக்கு சிறந்த தாயாக போதிய நேரத்தை ஒதுக்குகிறார்.

பதினைந்து ஆண்டுகளாக இலங்கையில் தாம் மேற்கொண்டு வரும் பணிகளுக்கான அங்கீகார மாக கிடைத்துள்ள இந்த விருது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் கலைவாணி.

நீண்டகாலம் வளர்ப்புத் தாயாக சேவையாற்றியவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆதரவு தேவைப்படும் குழந்தை களைப் பராமரிக்கும் வளர்ப்புத் தாயாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் திருவாட்டி செண்பகவள்ளிக்கு இந்த ஆண்டின் வாழ்நாள் சாத னையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

எட்டுப் பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி செண்பகவள்ளி 42 பிள்ளைகளின் வளர்ப்புத் தாயாகவும் உள்ளார்.

இவரது நீண்டகாலத் தொண்டூ ழியத்தைப் பாராட்டும் வகையில் 2015ஆம் ஆண்டில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நீண்டநாள் சேவை விருது வழங் கப்பட்டது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சாதனைப் பெண்களுக்கான விருதுகளுக்கு 34 விண்ணப் பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் டாக்டர் உமா ராஜன், எலிம் சியூ, ஜூதிகா ராமநாதன், மஹேஷ் சிவசுவாமி ஆகிய நால்வர் அடங் கிய தேர்வுக்குழு விருதுக்குரிய வர்களைத் தேர்வு செய்ததாகவும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபை கூறியது.

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குரிய வரை இந்நிகழ்ச் சியின் ஏற்பாட்டுக் குழு தேர்ந்து எடுத்தது.

சிங்கப்பூர் இந்தியர்களில் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் பெண்கள் என்று இருக்கையில், சமூகத்தில் மற்றவர்களுக்கு உந்துதலாகத் திகழும் பெண் களைக் கௌரவிப்பதற்குரிய தளத்தை ஏற்படுத்தித் தருவது முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டது.