உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் நீங்கா நினைவுகள்

தாம் சண்முகம்

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் தங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் பதிவு செய்ய வேண்டும் என செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கூறினார்.

தென்கிழக்கு ஆசியாவின் ஒரே தமிழ் உயர் நிலைப் பள்ளியாகத் திகழ்ந்த உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 'முத்துச் சிதறல்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று உரையாற்றிய திரு விக்ரம், தமிழ் படிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் தமிழாசிரியர் களாகவும் சமூகத் தலைவர்களாக வும் மேலும் பல்வேறு துறைகளிலும் சிறந்து பணியாற்றி இருக்கிறார்கள் என்றும் அவர்களின் கதைகள் பல செய்திகள் சொல்ல வல்லது என்றும் சொன்னார்.

1982ல் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட இப்பள்ளி தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு, எதிர்கொண்ட சவால்கள், பங்காற்றியது போன்ற வரலாற்று செய்திகளைத் தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பதே இந்நிகழ்வின் நோக்கம் என்றார் சங்கத்தின் தலைவர் திரு பொன் சுந்தரராசு.

1960க்கு முன்பு தொடக்கநிலை யில் மட்டுமே தமிழில் படிக்க முடியும் என்றிருந்த நிலையில், திரு அ.நா.மைதீன் அவர்களின் பெரு முயற்சியால் உமறுப்புலவர் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்ட தாக கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் அ.வீரமணி, உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி குறித்து பல ஆய்வுத் தகவல்களை வெளியிட்டார். இப்பள்ளிக்கு சுமார் $60,000 நிதியளித்தவர்கள் சீன புரவலர்கள். தமிழவேள் கோ. சாரங்கபாணி தமிழ் முரசு மூலம் நன்கொடை திரட்டினார். இப்பள்ளி நிறுவ பெரும் பாடுபட்ட திரு அ. நா.மைதீன் இலவசமாக கல்விப் பணி செய்து வந்தார் என்றும் வேலை செய்பவர்களுக்கு உதவும் வகையில் இரவு வகுப்புகள் நடந்தன எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கல்விக் கொள்கையைச் சார்ந்து செயல்பட்ட தால் இப்பள்ளி மாற்றங்களுக்கு எளிதில் தயாரானது. அக்காலத் தில் ஆண்களை ஆங்கிலப் பள்ளிக்கும் பெண்களைத் தமிழ்ப் பள்ளிக்கும் அனுப்பும் போக்கு இருந்ததால் இத்தமிழ் பள்ளியில் பெண்கள் அதிகம் படித்தனர். இச்சங்கம் தொடர்ந்து பல ஆண்டுகள் நீடித்து தொடர சங்க உறுப்பினர்களின் அடுத்த தலை முறையினர் உறுப்பினர்களாக வேண்டும் என அவர் கூறினார்.

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் கடைசியாக படித்த ஐந்து பேரில் ஒரே பெண் மாணவி யான திருமதி இரா.சு.மலர்க்கொடி, 52, தற்போது தேசிய வளர்ச்சி அமைச்சில் அதிகாரியாக பணிபுரி கிறார். அதே பள்ளியில் தமிழ் படித்த தமது சகோதரிகள் இரு வரும் அரசாங்கப் பணியில் இருப் பதாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் 'முத்துச் சிதறல்' நினைவு மலர் வெளியிடப்பட்டது. இப்பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பன்னிரண்டு மூத்த முன்னாள் மாணவர்களின் குறிப்புகள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக ஒவ்வொரு பள்ளி யிலிருந்தும் எடுத்துச் செல்ல நினைவில் நிற்கும் ஒரு சில விஷயங்கள் இருக்கும். அவ்வாறே இப்பள்ளிக்கே உரிய தமிழ் பாடல் முன்னாள் மாணவர்கள் நினைவில் நிழலாடியது.

பார்வையாளர்களின் கோரிக் கைக்கு ஏற்ப 'முத்துச் சிதறல்' நினைவு மலரில் இடம்பெற் றிருந்த அப்பாடலை முன்னாள் மாண வர்கள் பாடிய நெகிழ்ச்சியான தருணத்துடன் நிகழ்வு இனிதே முடிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!