தமிழ்மொழிப் பயன்பாட்டை வலியுறுத்திய நிகழ்ச்சி

தமிழ்மொழிப் பயன்பாட்டை வலியுறுத்திய நிகழ்ச்சி

2 mins read
cc20ca64-4dd4-4959-9238-13d87a54d3c3
தமிழ்மொழி பற்றி நாடகம் படைத்த உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்கள். செய்தி, படங்கள்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் -
multi-img1 of 2

கலாசாரத்தைப் பேணிக்காக்க தாய்மொழிகளின் பயன்பாடு அவ சியம் என்று வலியுறுத்தினார் பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜைனல் சப்பாரி.

தமிழ்மொழி விழா 2019ன் ஓர் அங்கமாக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) இம் மாதம் 19ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் ஏற்பாடு செய்திருந்த 'தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

சுமார் 300 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வாணியம்பாடி இஸ் லாமியா கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், தொலைக்காட்சி 'அகடவிகடம்' புகழ் கவிமாமணி, பேராசிரியர் முனைவர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் 'தமிழ் எங்கள் உயர் வுக்கு வான்!' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

"சிங்கப்பூரில் தமிழ்மொழி பயன்பாட்டில் நிலைத்திருக்க, குறிப்பாக அடுத்த தலைமுறையின ருக்கு முறையாக போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய் தோம். இதில் கலந்துகொண்டவர் களில் பலர், இளையர்கள் என்று கூறுவதில் பெருமைப்படுகிறோம்," என்றார் சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு.அ.காதர்.

'ஒத்திகை' என்ற தலைப்பில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்களாகிய கிருத்திக்கேஷ், அருண், தமிழ்இலக்கியா, ஆன் சாஃப்ரின், பிரவின் ராஜ், யுவராஜ், ஹரி நாராயணன், ஹரீஸ்வரன், சுசிந்தர் ஆகியோர் நாடகம் ஒன்றைப் படைத்தனர்.

முனைவர் ரா.விமலன் ஒருங் கிணைப்பாலும் தமிழாசிரியர் திரு. வீ.ராமர் எழுத்து இயக்கியத்திலும் இந்த குறுநாடகம் அரங்கேற்றப் பட்டது.

முப்பது ஆண்டுகளுக்குமேல் சமூக சேவை ஆற்றிவரும் சிங் கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் திரு நசீர் கனிக்கு 'ஜமாலியன் விருது' வழங்கப்பட்டது.

'ஏ' நிலைத் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விக்டோ ரியா தொடக்கக் கல்லூரி மாண வரான திரு முஹம்மது மாதிஹ்க்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பட்டது.