சிந்திக்க வைத்த 'இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்'

சிந்திக்க வைத்த 'இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்'

1 mins read
952027ae-03e6-4eb2-a805-51999d807b28
-

தமிழ்மொழி விழா 2019 தொட ரில் இந்திய முஸ்லிம் பேரவை நடத்திய 'இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்' என்ற நிகழ்ச்சி கடந்த 21ஆம் தேதி ஞாயிறன்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் நடைபெற்றது. சுமார் 250 தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி யில் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரஹாயு மஹ்ஜம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார். இந்திய முஸ்லிம் பேரவை இவ்வாண்டு அறிமுகம் செய்த மாணவப் பேச்சாளர் செயின்ட் ஆன்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர் முஷ்தாக் ஆபித் 'தமிழ் எங்கள் உயர்வுக்குத் தோள்' என்ற தலைப்பில் பல தகவல்களைப் பகிர்ந்தார். சிறப்பு பேச்சாளர் திருமதி சுமதிஸ்ரீ, தமிழ் இலக்கியங்களில் இருந்து மடைதிறந்த வெள்ளம் போல பேசிய பேச்சைப் பார்வை யாளர்கள் ரசித்தனர். மாணவிகள் பவுஸுல் ஹினாயா, அப்தா முகம்மது ஆகியோர் திருமதி அப்ஸரா எழுதிய 'உணவும்-தமிழ் உணர் வும்' குறுநாடகம் மூலம் உணர் வூட்டி பலத்த கரவொலி பெற்ற னர். 'அளவுக்கு மிஞ்சினால் அலைபேசியும் நஞ்சு' என்ற கவிஞர் பரீஜினின் குறுநாடகத் தில் நடித்த நவாஜுத்தீன், இஹ் சான் அஜீஸ் இருவரும் பார்வை யாளர்களைச் சிரிக்கவும் சிந்திக் கவும் வைத்தனர்.