வெளிநாட்டு ஊழியர்களுக்கு மே தின விருந்து

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 'எஸ்பிஎச்' நிறுவனத்தைச் சேர்ந்த 19 தொண்டூழியர்கள் நேற்று 'உட்லே ரெசிடன்சஸ்' கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் களுக்கு உணவுப் பொட்டலங்களை யும் இலவச அன்பளிப்புப் பைக ளையும் வழங்கினர்.

காஜிமா மேம்பாட்டு நிறுவனமும் 'எஸ்பிஎச்' நிறுவனமும் ஒருங்கி ணைந்து செயல்படும் இக்கட்டடத் திட்டத்தில் பணிபுரியும் கிட்டத் தட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர் கள் சீனா, பங்ளாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வோர் அன்பளிப்பு பையி லும் இருந்த 'பிஸ்கட்டுகள்' பற் பசை, 'சோயா' பால், டி-சட்டை, பை போன்ற அத்தியாவசிய பொருட்கள் யாவும் 'எஸ்பிஎச்' ஊழியர்களாலும் பிரிவுகளாலும் வழங்கப்பட்டன. 'எஸ்பிஎச்' நிறு வனத்தின் பொதுத் தொடர்பு பிரி வின் தலைவரான சின் சூ ஃபாங், "வெளிநாட்டு ஊழியர்கள் நமது ஊழியரணியில் முக்கிய பங்கு வகிப்பதுடன் நாம் வாழும் அழகிய சமூகத்தை அமைப்பதற் கும் உதவுகிறார்கள். அந்த வகையில் நமது வெளிநாட்டு நண்பர்களின் கடின உழைப்பிற்கு இந்த வாய்ப் பின் மூலம் நாம் நமது பாராட்டு களைத் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்," என்றார்.

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானத் துறை யில் பணியாற்றி வருகிறார் திரு நாகலிங்கம் செல்லையா. இருப் பினும், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இலவச உண வையும் அன்பளிப்புப் பையையும் பெற்றது இதுவே முதன்முறை என்கிறார். தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க மாதந்தோறும் சுமார் $150யை செலவழிக்கும் 49 வயது திரு நாகலிங்கம், "என்னுடைய அன்பளிப்புப் பையில் தண்ணீர் பாக்கெட்டுகள், முகத்தை துடைப்ப தற்கான துண்டுகள் போன்றவை உள்ளன. இதுபோன்ற தொண் டூழிய சேவைகளின் மூலம் கிடைக் கும் பயனுள்ள பொருட்களால் எனது மாதச் செலவும் குறையும்," என்று கூறினார்.

கட்டுமானத் துறையில் ஈடுபடு வது மட்டுமல்லாமல் திரு நாக லிங்கத்திற்கு உலக நடப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வதிலும் அதிக நாட்டம் உண்டு. அந்த வகையில் தொண்டூழிய சேவையில் இலவசமாக வழங்கப்பட்ட 100 தமிழ் முரசு நாளிதழ்களில் ஒன் றைப் பெற்ற அவர், மிகுந்த மகிழ்ச்சியுடன் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தமிழ்நாடு, அறந்தாங்கியைச் சேர்ந்த திரு முத்துசாமி தேவராஜேஷ் ஒன்பது ஆண்டுக் காலமாக சிங்கப்பூரில் பணிபுரிகி றார். பெற்றோர், உடன்பிறப்புகள் என ஆறு பேர் கொண்ட குடும் பத்தைச் சேர்ந்த 30 வயது முத்து சாமி இந்தத் தொண்டூழிய சேவை யைப் பற்றி தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

"ஊழியர்களாகப் பணிபுரியும் எங்களை மதித்து உணவையும் பல பயனுள்ள பொருட்களையும் வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி. இவற்றை வழங்கிய நிறுவனத்திற் கும் தொண்டூழியர்களுக்கும் எனது நன்றி," என்றுக் கூறிய முத்துசாமி, தாம் இத்தனை ஆண் டுகள் சிங்கப்பூரில் இருந்ததற்கு அதன் நல்ல சூழலும் அன்பான மக்களுமே காரணம் என்றார்.

அதுபோக, தினமும் தமிழ் முரசு நாளிதழின் விளையாட்டுப் பக்கத்தை விரும்பிப் படிக்கும் அவருக்கு இலவசமாக நாளிதழ் கிடைத்துள்ளது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

பெற்றோர், உடன்பிறப்புகள், மனைவி என மொத்தம் ஏழு பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த திரு செந்தமிழ்செல்வன் முருகன், கடந்த எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.

மாதந்தோறும் தமக்கான தனிப் பட்ட செலவுகளுக்கு சுமார் $300யை ஒதுக்கும் அவருக்கு இத்தொண்டூழிய சேவையின் வழி பல பயனுள்ள பொருட்கள் கிடைத் துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதனால் இம்மாதம் அவரின் செலவு சிறிதளவு குறையும் என்று கூறிய 32 வயது முருகன், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இச்சேவை போற்றத்தக்கது என்றார்.

நீண்ட காலத்திற்கு பின் இந் நடவடிக்கையின் மூலம் மீண்டும் தொண்டூழியச் சேவையில் ஈடு பட்ட 'எஸ்பிஎச்' நிறுவன ஊழி யரான 46 வயது திருமதி சுந்தர வள்ளி, "வெளிநாட்டு ஊழியர்க ளிடம் பேசியதும் அவர்களிடம் பரிசுகளாகப் பொருட்களை வழங் கியதும் இதுவே முதன்முறை.

"அவர்களின் வேலைச் சூழ லைப் பார்த்து உணர்வதற்கும் இது ஓர் அரிய வாய்ப்பாக இருந் தது. நமது நாட்டில் பல அழகான கட்டடங்களை அமைத்து தருவ தில் முக்கிய பங்கு அளிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் சந் திப்பு ஒரு சுவாரசியமான அனுப வத்தை எனக்கு அளித்தது," என் றார். ஜப்பானிய வேலைப்பாடுகளை உள்ளடக்கும் இந்தத் தனித்துவ மான 'உட்லே ரெசிடன்சஸ்' கட் டட திட்டம் பிடாடாரி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இது மே 11ஆம் தேதிமுதல் விற்பனைக்கு விடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!