பொதுவாக கோவில் நிகழ்ச்சி களிலும் விழாக்களிலும் தொண் டூழியம் செய்யும் திரு சண்முகம் ராமுவுக்கு உதவி தேவைப்படும் முதியோருக்கு நேற்று உதவி செய்தது மாறுபட்ட அனுபவமாக அமைந்தது.
"முதியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கேட்டு அறிந்ததும் அவர்களுக்குத் தொண்டாற்ற வாய்ப்பு கிடைத் ததும் மகிழ்ச்சியைத் தந்தது. அவர்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடிந்தது," என்றார் தொழில்நுட்பராகப் பணிபுரியும் திரு சண்முகம்.
இந்து அறக்கட்டளை வாரி யத்தின் 50வது ஆண்டு நிறைவை புவாங்கோக் வியூவில் உள்ள சன்லவ் இல்லத்தில் தொண்டூ ழியம் புரிந்து கொண்டாடியது சிங்கப்பூரின் ஆகப் பழைய இந்துக் கோயிலான சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில்.
சன்லவ் இல்லவாசிகளை மகிழ்ச்சிப்படுத்த தொழிலாளர் தினமான நேற்று ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 30 தொண்டூழியர்களில் திரு சண்முகமும் ஒருவர்.
இல்லவாசிகளுக்கு உணவு பரிமாறுதல், அவர்களை நடவடிக் கைகளில் ஈடுபடுத்துதல் போன்ற வற்றில் அவர்கள் உதவினர்.
இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 200 முதியவர்கள் கலந்துகொண் டனர். அப்சராஸ் ஆர்ட்சின் நடனம், பாடல் நிகழ்ச்சி, மாயா ஜாலக் காட்சி போன்ற நிகழ்ச்சி களில் பங்கேற்று அவர்கள் மகிழ்ந்தனர்.
இல்லவாசிகளுக்கும் இல்லப் பணியாளர்களுக்கும் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. அத் துடன், சன்லவ் இல்லவாசிகளுக்கு இரண்டு உயிர்வாயு ஏற்றிகளை இந்து அறக்கட்டளை வாரியம் வழங்கியது. காற்றைத் தூய்மைப் படுத்த இக்கருவிகள் உதவும்.
சன்லவ் இல்லத்தில் வசிக்கும் இல்லவாசிகளின் தேவைகளைக் கேட்டு அவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் உயிர்வாயு ஏற்றிகள் வழங்கப்பட்டது போற்றத் தக்கது என சன்லவ் இல்லத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ராஜாமோகன் கூறினார்.
இந்த இல்லத்தில் பாதுகாப்பு கருதி தொண்டூழியம் செய்வதற்கு மக்கள் தயங்குவதாகக் குறிப்பிட்ட அவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பல அமைப்புகள் சன்லவ் இல்லவாசி களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்புகிறார்.
மேலும் இந்நிகழ்ச்சியை ஒரு தொடக்கமாகக் கொண்டு, வருங்காலத்தில் பல வழிகளில் இந்து அறக்கட்டளை வாரியத் துடன் சன்லவ் இல்லம் இணைந்து செயலாற்ற விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
இல்லத்தில் நடத்தப்படும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும் ஆடல் பாடல் நடவடிக்கையைக் கொண்ட இந்நிகழ்ச்சி தனித்துவம் வாய்ந்தது என்றும் அது தம்மைப் பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ள தாகவும் இல்லவாசி ஒருவர் கூறினார்.
இந்து அறக்கட்டளை வாரியத் தின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி இவ்வாண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சமூக சேவையில் கூடுதலாக ஈடுபட வாரியம் இலக்கு கொண்டுள்ளதால் சன்லவ் இல்லத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக இந்து அறக் கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர். ஜெயச்சந்திரன் தெரி வித்தார். வாரியத்தின்கீழ் செயல் படும் மற்ற கோயில்களும் வெவ் வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. கிட்டத்தட்ட 2,000 தொண்டூழியர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக் காகவும் நிகழ்ச்சி ஒன்று அடுத்த மாதம் நடைபெறும் என்றார் திரு ஜெயச்சந்திரன்.

