சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் 95ஆம் ஆண்டு நிறைவு அறப்பணி

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் 95ஆம் ஆண்டு நிறைவு அறப்பணி

2 mins read
38abb5cd-5eba-4677-b02e-10c7645b68a1
சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத்துக்குத் திரட்டப்பட்ட நிதிக்கான காசோலை விழா மேடையில் வழங்கப்பட்டது. படம்: சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை -

தனது 95வது ஆண்டு நிறைவை கோலாகலமாகக் கொண்டாடிய அதேவேளையில் அர்த்தமுள்ள சமூகப் அறப்பணியில் ஈடுபட்டது சிக்கி எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை.

அதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை கெப்பல் மன்றத் தில் 'கோல்ஃப்' போட்டியை அச் சபை நடத்தியது.

சிறுவர் புற்றுநோய் அறநிறு வனத்திற்கு நிதி திரட்டுவதற் காக நடத்தப்பட்ட போட்டி இது.

எல்லா இனத்தவரையும் இவ் வுதவி சென்றடைவதால், போட்டி யின் ஏற்பாட்டுக் குழுவினர் சிறு வர் புற்றுநோய் அறநிறுவனத்தை அனுகூலம் பெறும் அமைப்பாக தேர்வு செய்தனர். 140க்கும் மேற்பட்ட 'கோல்ஃப்' விளையாட் டாளர்கள் இப்போட்டியில் பங்கு பெற்றனர். 18 ஆதரவாளர்களும் இந்த முயற்சிக்கு கைகொடுத்தனர்.

இதன்தொடர்பில் அதே நாளில் நடத்தப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் வர்த்தக தொழில், கல்வி அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

"நிறுவன சமூக செயல்திட்டம் வெறும் ஒப்புக்காக செய்யும் முயற் சியாக இருக்கக்கூடாது. அத்திட் டத்தின் ஒருங்கிணைந்த முயற்சி, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக வும் துடிப்புமிக்கதாகவும் இருக்க வேண்டும். இப்போட்டி அதற்கு ஒரு நல்ல உதாரணம்," என தமது உரையில் குறிப்பிட்டார் அமைச்சர்.

"புற்றுநோய் உடல், மனரீதியாக பாதிக்கிறது. நோய்வாய்ப்பட்ட சிறு வர்களுடன் அவர்களின் குடும்பத் தினரும் பாதிப்படைகிறார்கள்.

"சிறுவர்கள் தங்களது குடும் பத்தினருடன் நிலைமையைச் சமாளிக்க உதவும் நோக்கத்துடன் கோல்ஃப் போட்டிக்கு ஏற்பாடு செய்தோம்," என்று கூறினார் சிங் கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை தலைவர் டாக்டர் டி.சந்துரு.

லிட்டில் இந்தியாவில் சிறிய, நடுத்தர நிறுவன நிலையத்தை தொடங்கியது வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட அவர், பாரம்பரிய முறையிலான வர்த்தகங்களின் நடவடிக்கை களை மின்னிலக்கமாக்க உதவு வதிலும் வெளிநாட்டுச் சந்தை களில் புதிய வர்த்தக வாய்ப்பு களைத் தேடித்தரவும் சபை தொடர்ந்து பாடுபடும் என்றார்.

இப்போட்டி மூலம் $100,000 நன்கொடை திரட்டப்பட்டது. இதற்கு மேலாக 'கோல்ஃப்' விளை யாட்டுப் பொருட்களை ஏலமிடும் அங்கம் விருந்து நிகழ்ச்சியில் இடம்பெற்றதோடு, அதிலிருந்து திரட்டப்பட்ட தொகையும் சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.