தாமான் ஜூரோங் இந்திய நற்பணி செயற்குழு தமிழ்ப் புத்தாண்டை நேற்று முன்தினம் விமரிசையாகக் கொண்டாடியது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி மதல் இரவு 9.30 மணி வரை தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் நடத்தப்பட்ட விழாவில் எல்லா வயதினரும் எல்லா இனத்தவரும் இணைந்து பங்கேற் பதற்கு ஏதுவான பல்வேறு அம்சங் கள் இடம்பெற்றன.
விளையாட்டுகள், பல இன கலாசாரப் படைப்புகள், இரவு உணவு என்று வரிசையாக நடை பெற்ற நிகழ்வுகளில் கிட்டத்தட்ட 2,000 குடியிருப்பாளர்கள் பங்கேற் றனர்.
சிறப்பு விருந்தினராக மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முக ரத்னம் கலந்துகொண்டார்.
இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் வசதி குறைந்த 550 குடியிருப் பாளர்களுக்கு உதவிகள் வழங்கப் பட்டன. மேலும் வசதி குறைந்த குடும்பங்களிடையே விழிப்புணர் வை ஏற்படுத்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நடவடிக்கைகளில் விழா கவனம் செலுத்தியது.
விழாவின் சிறப்பம்சமாக ஆகப் பெரிய பல அம்ச, பலவண்ண ஓவி யம் வரையப்பட்டது.
முன்னோடித் தலைமுறையின ருக்கும் மெர்டேக்கா தலைமுறை யினருக்கும் அர்ப்பணமாகப் படைக்கப்பட்ட அந்த ஓவியம் சிங் கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
குடியிருப்பாளர்களுடன் புத் தாண்டுக் கொண்டாட்டத்தில் பங் கேற்ற ஜூரோங் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோச கருமான திரு தர்மன் மூத்த குடி மக்களின் பெருமைகள் பற்றி பேசி னார்.
"அறிவு ஞானமும் அன்பும் அனுபவசாலிகளிடமிருந்து வர வேண்டும். அந்த வகையில் நமது ஒட்டுமொத்த நன்மைக்கும் காரண மாக நமது மூத்தோர் உள்ளனர் . மேலும் இங்கு வந்திருக்கும் அனைவரும் நேசத்திற்குக் கட்டுப் பட்ட வாழ்க்கை என்னும் நமது சிங்கப்பூர் மரத்தை வளர்க்கக் கடப்பாடு கொண்டுள்ளோம்," என் றார் திரு தர்மன்.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஆகப்பெரிய பல அம்ச, பல வண்ண ஓவியத்தின் முன்

