பாலியல் பித்தும் குளியலறை பார்வையும்

சிலர் ஆபாசக் காணொளிகளை எடுக் கிறார்கள். சிலர் குளியலறை போன்ற இடங்களை எட்டிப் பார்க்கிறார்கள். இத் தகைய காரியங்களைத் திடீர் மன உந்துத லால் சிலர் செய்வதுண்டு. மற்றவர்களோ திரும்பத் திரும்ப இதே குற்றங்களைச் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் ஒருபுறம் இருக்க, மனநிலை ஒழுங்கு இல்லாதவர்களும் இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதுண்டு.

பல்கலைக்கழக வளாகங்களில் மாண விகள் குளித்ததை ரகசியமாக எட்டிப் பார்த்த, படம் எடுத்த பல சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை அடுத்து இந்த நில வரங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பாலியல் பித்து அதிகரிப்பு

'பாலியல் பித்து' பாதித்துள்ள மக் களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மறைந்திருந்து திருட்டுத்தனமாக மற்ற வர்களை எட்டிப் பார்ப்பது உள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்கு இத்தகைய மன நிலை காரணமாகி விடுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மனச்சோர்வு, குழந்தைப் பருவத்தில் பல கொடுமைகளுக்கு ஆளாவது போன் றவை பாலியல் பித்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

டான் என்பவருக்கு (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) 14 வயது முதற்கொண்டே ஒரு பழக்கம் உண்டு. பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற உணர்வை இவரால் கட்டுப்படுத்தவே முடியாது. பார்ப்பதோடு படங்களையும் எடுத்துவிடுவார்.

அவற்றை இணையத்தில் சேர்த்து வைப்பார். இத்தகைய காரியத்தை ஒரு சில நாட்கள் செய்யவில்லை என்றால் இவருக்குப் பித்து பிடித்ததுபோல் ஆகி விடும். மணமான பிறகும் இவர் ஆபாச படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தார்.

இணையத்தில் பாலியல் பக்கங்களுக் கும் செல்வார். விலை மாதர்களையும் அணுகுவார். 2016ல் திருமணம் கசந்து விட்டது. இவருடைய இந்தக் காரியங் கள் எல்லாம் இவருடைய மனைவிக்குத் தெரியவந்தது. எப்படியாவது மணவாழ்க் கையைத் தொடர வேண்டும் என்பதற்காக டான், மனப்பித்து சிகிச்சை நிலையத் திற்குச் சென்றார்.

இவருக்கு 'பாலியல் நடத்தை தூண்டு ணர்வு' என்ற ஒருவகை மன நோய் (CSBD) இருந்தது தெரியவந்தது.

இந்த மனநிலையை உலக சுகாதார நிலையம் சென்ற ஆண்டு 'ஒரு வகை மன ஒழுங்கீனம்' என்று அங்கீகரித்தது. இத்தகைய மனநிலை பாதிப்புக்கு ஆளான வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

கடந்த 2013 முதல் ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்து இருக்கிறது என்று 'பிராமிசஸ் ஹெல்த்கேர்' என்ற நிறுவனத் தின் மூத்த ஆலோசகரான மனோவியல் வல்லுநர் முனிதாசா வின்ஸ்லோ தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!