கேலாங் மேற்கு சமூக மன்றத்தில் பட்டிமன்றம்

கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, அன்னையர் தினத்தை முன் னிட்டு இம்மாதம் நான்காம் தேதி மாலை அப்பர் பூன் கெங் சாலையில் அமைந்துள்ள கேலாங் சமூக மன்றத்தில் சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

‘இளையர்களின் திறமைகள் வெளிப்படப் பெரிதும் காரண மானவர்கள் பெற்றோர்களா? நண்பர்களா?’ என்ற தலைப்பில் மனம் விட்டு சிரிக்கவும் நல்ல கருத்துக்களை சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் நடத்தப் பட்டது. முனைவர் இரத்தின வேங்கடேசன் நடுவராகப் பணி யாற்றினார்.

‘இளையர்களின் திறமைகள் வெளிப்படப் பெரிதும் காரண மானவர்கள் பெற்றோர்களே’ என்ற அணியில் குமாரி வீர. விஜயபாரதி, திரு. கலாநிதி இராஜகோபாலன், திரு முஹம்மது பிலால் ஆகியோர் சங்கப்பாடல் களிலிருந்து வரலாறு, உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றை மேற் கோள் காட்டி வாதிட்டனர்.

‘இளையர்களின் திறமைகள் வெளிப்படப் பெரிதும் காரண மானவர்கள் நண்பர்களே’ என்ற அணியில் திருமதி. சாந்தி காளிதாஸ், குமாரி நசீமா பேகம், திரு.அர்ஷத் ஆகியோர் பத்திரிகை செய்திகள், கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களை எடுத் துச் சொல்லி வெட்டியும் ஒட்டியும் பேசினர்.

வாதங்களை சீர்தூக்கிப் பார்த்து ‘இளைஞர்களின் திறமை கள் வெளிப்படப் பெரிதும் காரண மாக இருப்பது நண்பர்களே’ என தீர்ப்பளித்தார் நடுவர்.

கொளம் ஆயர் குடிமக்கள் ஆலோசனை குழு தலைவர் திரு சியாங் ஹெங் லியாங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டிமன்ற பங்கேற்பாளர் களுக்கு நினைவுப்பரிசு வழங் கினார்.

முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய ஏற்பாட்டுக்குழு தலை வரும் இந்தியர் நற்பணிச் செயற் குழு செயலாளருமான திரு. முஹம்மது பிலால், பதின்மூன் றாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் பட்டிமன்ற நிகழ்வு வட்டார இந்தியர்களை இணைக்கும் பால மாக அமைந்துள்ளதை எடுத்துக் கூறியதுடன் இந்திய குடியிருப் பாளர்கள் அருகில் உள்ள சமூக மன்றங்களோடு தொடர்பில் இருக் கவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

பட்டிமன்ற நிகழ்ச்சியில் நூற் றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண் டனர்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு கேலாங் மேற்கு சமூக மன்றத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டிய பட்டிமன்றத்தில் முனைவர் இரத்தின வேங்கடேசன் நடுவராக இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!