காந்தாரி, வெனிஸ் வணிகன் நாடக வாசிப்பு அரங்கேற்றம்

காந்தாரி, வெனிஸ் வணிகன் நாடக வாசிப்பு அரங்கேற்றம்

1 mins read
3bd46921-1964-454f-a27e-8c7e57d3f8f6
பயிற்சியில் ஈடுபட்டுள்ள 'வெனிஸ் வணிகன்' நாடக வாசிப்புக் குழு. படம்: அவாண்ட் நாடகக் குழு -

அவாண்ட் நாடகக் குழு 'காந்தாரி', 'வெனிஸ் வணிகன்' எனும் இரண்டு நாடக வசனப் படைப்புகளை வழங்க இருக்கிறது.

மகாபாரத பெருங்காப்பியத்தில் பரவலாகப் பேசப்படாத பாத்திர மாகிய காந்தாரி எதிர்கொண்ட இன்னல்களையும் சோதனை களையும் 'காந்தாரி' என்னும் நாடக வாசிப்பு அலசுகிறது. காப் பியத்தில் தாம் எதிர்கொள்ளும் இதர பாத்திரங்களின் நோக்கத் தையும் தொடர்பையும் சமகால மாற்று எதிரொலி உத்தியைப் பயன்படுத்திக் காந்தாரி கேள்வி எழுப்புவதுபோல் அமைக்கப்பட்டு உள்ளது.

வில்லியம் ஷேக்ஸ்பியர் புனைந்த The Merchant of Venice என்பதன் தமிழாக்கமான 'வெனிஸ் வணிகன்' என்பது இரண்டாவது படைப்பு.

பல சுவையான உணர்வு வெளிப்பாட்டுத் திருப்பங்கள் நிரம்பிய இக்கதை, தற்போதும் கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க வைக்கத்தக்கது.

31/5/2019 அன்று இரவு 7.30 மணிக்கும் 1/6/2019 அன்று பிற்பகல் 3 மணி, இரவு 7.30 மணிக்கும் ஸ்டாம்ஃபோர்ட் ஆர்ட்ஸ் சென்டர் பிளாக் பாக்சில் இது நடைபெறும்.

நுழைவுச் சீட்டுகளுக்கு:

admin@avanttheatre.com