தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துகளையும் அந்த எழுத்துகள் இடம்பெற்ற சொற்களையும் எழுதி திருமதி ரம்யா சுரேஷ், திருமதி காயத்ரி பிரகாஷ் ஆகியோர் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். பங்கேற்பாளர்கள், அந்த எழுத்து களைச் சுற்றிக் கோலத்தையும் வரைந்திருந்தனர். ஓர் எழுத்துக்கு ஒருவர் என்ற வீதத்தில் 247 பேரும், கோலமிட்ட 40 பேரும் என ஐந்து முதல் 68 வயது வரையிலான சுமார் 290 பேர் பங்கு கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு ஜோதி மாணிக்கவாசகம் ஞ, ங வரிசையிலான எழுத்துகளைப் பயன்படுத்தும் சொற்கள் ஏன் புழக்கதில் இல்லை என்பதை விளக்கிக் கூறினார். அச்சொற்களுக்கு ஈடான எளிய சொற்கள் பயன்பாட்டில் வந்துவிட்டதால் அச்சொற்கள் தேவையற்றவையாகி விட்டன என்றார் அவர். உட்லண்டஸ் வட்டாரத்தில் இருக்கும் ஃபூசுவான் உயர்நிலைப்பள்ளி யில் மே 25ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கரகாட்டம் என இந்திய பாரம்பரிய நடனங்களும் தொடக்கத்தில் இடம்பெற்றன. படம்: ரம்யா
247 தமிழ் எழுத்துகளுடன் சிங்கப்பூர் சாதனை
1 mins read
-

