அருங்காட்சியகத்தின் கையேடு குடும்பத்துக்கும் ஊக்கமூட்டும்

அருங்காட்சியகத்தின் கையேடு குடும்பத்துக்கும் ஊக்கமூட்டும்

1 mins read
7e866089-88c9-4da1-897b-45399ddde0cf
தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருக்கும் அரிய பொருட்களை நேரடியாகக் கண்டு அவை தொடர்பான வரலாறுகள், விளக்கங்களை குடும்பத்துடன் தெரிந்துகொள்ள பல ஏற்பாடுகளும் வாய்ப்புகளும் உள்ளன. படம்: தேசிய அருங்காட்சியம் -
Google News Preferred Icon

சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத் தின் நான்கு நிரந்தர கலைக்கூடங் களில் இடம்பெற்றுள்ள கலைப் பொருட்களின் பின்னணி தகவல் களைப் பிள்ளைகள் தங்கள் பெற் றோருடன் சேர்ந்து மகிழ்ச்சியான வழிகளில் கண்டு, உணர்ந்து ரசித்து தெரிந்துகொள்ள ஊக்க மூட்ட தேசிய குடும்ப வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை, ஒருமாத கால சிறார் சிறப்புச் செயல்திட்டம் ஆகியவற்றையொட்டி "Get Curious!" என்ற அந்த 116 பக்கக் கையேடு அருங்காட்சியகத்தின் முதலாவது அதிகாரபூர்வ கையே டாக இம்மாதம் முதல் தேதி வெளி யிடப்பட்டது.

அருங்காட்சியம் பற்றிய பல தகவல்களையும் கொண்டுள்ள கையேடு அருங்காட்சியகத்தில் $18 விலைக்குக் கிடைக்கும். ஜூலை 1 முதல் முக்கிய புத்ததகக் கடை களிலும் அதை வாங்கலாம்.

அந்தக் கையேட்டையொட்டி இந்த ஆண்டின் சிறார் சிறப்புச் செயல்திட்டம் தேசிய அருங்காட் சியகத்தில், அதன் நிரந்தர கலைக் கூடங்களிலும் வரலாற்றிலும் ஒரு மித்த கவனம் செலுத்தும்.

குடும்பங்களும் சிறார்களும் அருங்காட்சியகம் சென்று பயிலரங்கு, விளையாட்டுப் போட்டி பலவற்றிலும் பங்கெடுக்கலாம்.

புதிய கேயேடு பிள்ளைகளுக் கும் பெற்றோருக்கும் வீட்டிலும் உதவும். அருங்காட்சியகத்தைப் பற்றியும் அங்குள்ள அரிய பொருட் களைப் பற்றியும் கேளிக்கையான வழிகளில் பலவற்றையும் தெரிந்து கொள்ள அது கைகொடுக்கும்.

பலவற்றையும் கண்டு ரசிக்க அருங்காட்சியகத்துக்கு அனை வரும் வரவேற்கப்படுகிறார்கள்.