சுடச் சுடச் செய்திகள்

கற்றல் கற்பித்தலில் ஆய்வுப்போக்குகள்: பன்னாட்டுப் பிரமுகர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கு

‘கற்றல் கற்பித்தலில் இடம்பெறக் கூடிய - நவீன ஆய்வுப்போக்குகள்’ பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்ற மாதம் 26ஆம்  தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடந்தது. 

சிங்கப்பூர், தமிழ்நாடு, இலங்கை, மலேசியாவைச் சேர்ந்த கல்வி யாளர்கள் கலந்துகொண்ட கருத் தரங்கில், சிங்கப்பூர்த் தமிழா சிரியர் சங்கத் தலைவர் திரு சாமிக்கண்ணு, தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் தமிழாசிரியர் சங்கம் முன்னெடுத்துவரும் பங்கையும் பணியையும் விவரித்தார். முனைவர் சண்முகம், முனைவர் ஆ.ரா. சிவகுமாரன், முனைவர் சீதாலட்சுமி முதலானோர் தமிழாய் வுத்துறையின் நவீனப் போக்குகள் குறித்து பேசினர்.

தமிழ்மொழி கற்றல், -கற்பித்தல் நவீன ஆய்வுப்போக்குகள் என்ற பொருண்மையிலான கருத்தரங் கம் செம்மூதாய் பதிப்பக உரிமை யாளர் முனைவர் சதாசிவம் தலை மையில் நடந்தது. 

தமிழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர்களும் ஆய்வாளர் களும் பல பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தனர். 

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங் கத்தின் ஏற்பாட்டில்,  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த் தக் கல்லூரி, சிவகாசி இராஜரத் னம் மகளிர் கல்லூரி, சென்னை சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை செம்மூதாய் பதிப்பகம் ஆகியவை இணைந்து இக்கருத் தரங்கை நடத்தின.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon