சிங்கப்பூர் சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கண்காட்சி

சிங்கப்பூர் சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கண்காட்சி

1 mins read

சிங்கப்பூரில் நிலவும் சமய நல்லிணக்கத்தை எடுத்துக்காட் டும் வகையில் "பல நம்பிக்கைகள், ஒரே எதிர்காலம்" எனும் கண்காட்சியை போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் பே யாம் கெங் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சமயங்களின் நம்பிக் கைகளை எடுத்துக்காட்டும் கலைப் பொருட்கள், கலைப் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. தனி நபர்கள் மட்டுமல் லாது சிங்கப்பூரின் சமய அமைப்புகளும் இக்கண்காட்சிக்கு பங்களித்துள்ளன.

அனைத்துலக பிணைப்புமிக்க சமூகங்கள் தொடர்பான மூன்று நாள் மாநாட்டையொட்டி இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 700 பேராளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியின் 3வது தளத்தில் ஞாயிறு வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.