ஜூன் 29ஆம் தேதி பேசும் கலை வளர்ப்போம்

ஜூன் 29ஆம் தேதி பேசும் கலை வளர்ப்போம்

1 mins read

ஜாலான் புசார் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இளம்பிறை இலக்கிய வட்டமும் இணைந்து 'பேசும் கலை வளர்ப்போம்' என்ற மாதாந்திர மன்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. ஜெலிகோ ரோட்டிலுள்ள ஜாலான் புசார் சமூக மன்றத்தில் மாதந்தோறும் இறுதிச் சனிக் கிழமை மாலை 6 மணி முதல் 8.30 மணிவரை நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 29ஆம் தேதி நிகழ்ச்சியில் முனைவர் மன்னை க. இராஜகோபாலன் 'நீங்களும் பேச்சாளராகலாம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவார். மேடையில் பேச ஆர்வமுள்ளவர் களுக்குப் பேச்சுக்கலைக்கு ஊக்கமளிக்கும் மன்றம் இது. மேல் விவரங்களுக்கு அழைக்க ஜஹாங்கீர் (90072961), முஹம்மது பிலால் 98534986 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.