வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்த நிகழ்ச்சிகள்

தேசிய நூலக வாரியமும் சிங் கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மும் இணைந்து ‘பயணக் கட் டுரை’ என்ற தலைப்பில், ஞாயிறு மதியம் 2:30 மணி முதல் 5:30 மணி வரை பயிலரங்கு ஒன்றை நடத்தியது. பயிலரங்கை கழகத் தின் துணைச் செயலாளர் எழுத் தாளர் கிருத்திகா செம்மையாக வழிநடத்தினார்.

பயணத்தின் முக்கியத்து வத்தைப் பங்கேற்பாளர்களுடன் கலந்து பேசிய பொழுது, பயணத் தில் தனித்துவமான இடங்களைப் பார்ப்பதோடு, கவனிக்கும் ஒவ் வொரு சிறு விசயத்தையும் உட னுக்குடன் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்புக் கொடுத்தார்.

சம்பந்தப்பட்ட தரவுகளைச் சேகரிப்பது பயணக் கட்டுரை எழுத கைகொடுக்கும் என்றார்.

’உலகம் சுற்றும் தமிழன்’ என்று அழைக்கப்படும் ஏ.கே.செட்டி யார், மணியன், சிவசங்கரி, எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழில் எழுதியிருக்கும் பயணக் கட்டுரைகளை வாசிப்பது அவசி யம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சிங்கப்பூரின் எஸ்.எஸ்.சர்மா, பி.பி.காந்தம், அ.வீரமணி, கிருத் திகா, பொன்.மகாலிங்கம் போன் றோர் எழுதியுள்ள பயணக் கட் டுரை நூல்களையும் பங்கேற்பாளர்க ளுக்கு அறிமுகம் செய்து வைத் தார்.

பயணக் கட்டுரை எழுதுவதற்கு எந்தக் கோணத்தில் கதை சொல்ல வேண்டும் என்று ஒருவர் முதலில் முடிவு செய்வது முக்கியமான ஒன்று என்றார்.

எழுத்தாளரின் தனி நடை வெளிப்படும் வண்ணம் இடங் களையும் அவை தன்னுள் தூண் டும் எண்ணங்களையும் தேவைக் கேற்றபடி புகைப்படங்களையும் சேர்த்துக் கட்டுரை படைக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

அறிமுகம் அதிகமில்லாத ரசிக்கத்தக்க இடங்கள் மட்டு மல்லாது, சிங்கப்பூரிலேயே அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களும் சுவாரசியமான பயணக் கட்டு ரைக்கு கருப்பொருளாக அமைய லாம் என்பதை விளக்கினார்.

பயணக் கட்டுரை எழுதும் உத்திகளை எடுத்துக்காட்டு களுடன் கிருத்திகா விளக்கிக் கூறிய பின்னர், பங்கேற்பாளர் களுக்கு பயணக்கட்டுரை எழுதுவ தற்குப் பயிற்சிகள் கொடுக்கப் பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன.

உயர்நிலைப்பள்ளி, பல்கலைக் கழக மாணவர்கள் முதற்கொண்டு எழுத்தாளர்களும் பொதுமக்களும் உற்சாகமாக கலந்து கொண்டு கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட னர்.

பல்வேறு வித்தியாசமான அனு பவங்களை முன்வைத்த பங்கேற் பாளர்கள், இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டதன் மூலம் அவற்றைப் பயணக்கட்டுரையாக எழுதும் ஊக்கம் பெறுவதாகக் கூறினர்.

எழுத்தாளர் எம்.கே.குமாருடன் ஒரு பயணம்

வாசிப்பு விழா 2019-ன் ஒரு நிகழ்வாக, சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.கே.குமார் தன் இலக்கியப் பயணத்தில் தன்னை, தன் படைப்பு களை உருவாக்கிய இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தன்னை உருவாக்கிய ஆசிரி யர்கள், சிங்கப்பூர் தேசிய நூலகம், வாசகர் வட்டக் கலந்துரையாடல் கள் போன்றவற்றை அவர் நினைவு கூர்ந்தார்.

தன் இலக்கியப் பயணத்தில் ஒரு சொல் உருவாக்கிய பாதிப் புகளை திருக்குறளில் உள்ள செல்லாமை, இப்பிறப்பில், தும்மல் போன்ற பல்வேறு குறள்களைக் கொண்டு எடுத்துரைத்தார்.

காலம் உருவாக்கிய பாதிப்பு­களாக சங்கப்பாடல்கள் தரும் பிரிவின் துயரங்களை மேற்கோள் காட்டினார்.

உரவோர் உரவோர் ஆகுக, நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரள வின்றே, சிறுகோட்டுப்பழம் உள் ளிட்ட பாடல்கள் தன்னில் உரு வாக்கிய மாற்றங்களைச் சொன் னார்.

தன் கவிதை, கதைகளின் தலைப்புகள் சங்கப்பாடல்களின் பின்புலத்தைக் கொண்டிருப்பது பற்றி விவரித்தார்.

தனக்குப் பிடித்த சிறுகதை களைப் பட்டியலிட்ட அவர், அசோகமித்திரனின் புலிக்கலை ஞன் சிறுகதையையும் ஆண்டன் செக்காவ் எழுதிய நாடகக்காரி கதையையும் உதாரணமாகச் சொன்னார்.

அக்கதையின் வரிகள் தன்னை எவ்வாறு பாதித்தன என்பதையும் எடுத்துரைத்தார்.

கலந்துரையாடலில் சிங்கப்பூர் நிலம் சார்ந்த கதைகள் எழுதுவது குறித்தும் அவ்வாறு எழுதும்போது பண்பாடு சார்ந்த பகுதிகளில் எவ்வாறு கவனம் செலுத்தப் படுகிறது என்பதையும் சிங்கப்பூரில் தொடர்ந்து விளிம்புநிலை மனிதர் களைக் கவனிப்பது குறித்தும் அவற்றைப் பதிவுசெய்வது குறித் தும் அவர் பதிலாகப் பகிர்ந்து கொண்டார்.

பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டிய ‘வாசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி

வாசிப்பு விழா 2019ன் ஓர் அங்க மாக “வாசிக்கலாம் வாங்க” என்ற நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 23ஆம் தேதி ஜூரோங் வட்டார நூலகத்தில் நடந்தேறியது.

நிகழ்ச்சியில் 150க்கும் மேற் பட்ட குழந்தைகளும் பெற்றோர் களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தேசிய நூலக வாரியமும் லிஷா (LISHA) இலக் கிய மன்றமும் தாமான் ஜூரோங் தமிழ் மன்றமும் இணைந்து ஏற் பாடு செய்திருந்தன.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்கு விக்கவும் அதை விளையாட்டாய் குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல வும் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை இரு சிறப்பு அங்கங்களாகப் பிரித் திருந்தனர்.

“வாசித்து விளையாடு” நிகழ்ச்சியில் திரையில் தமிழ்ப் பழ மொழிகள், அறநெறிச் சொற்றொ டர்கள் பல்வேறு தலைப்புகளில் காண்பிக்கப்பட்டு குழந்தைகள் விரைவாக பதில்களைக் கூறுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. பெற் றோர்களை முந்திக்கொண்டு பிள் ளைகள் பதிலளித்து அசத்தினர்.

அடுத்து, தேடி விளையாடு அங்கத்தில் தமிழ்க் கதைப் புத் தகங்களோடு அறிவியல்/ஆரோக் கியம்/சமூக நெறி புத்தகங்களை யும் குழந்தைகளிடம் அறிமுகப் படுத்தும் நோக்கில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டன.

குழந்தைகள் நூலகத்தில் புத் தகங்களைத் தேடி கேள்விகளுக் கான விடைகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்தனர்.

வாசிப்பை நேசிப்போம் என்ற முழக்கத்தோடும் தமிழ்தாய் வாழ்த் துடனும் தொடங்கிய இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந் தினர் திரு.ராஜ்குமார் சந்திரா வாசிப்பின் முக்கியத்துவத்தையும் பயனையும் பற்றி கூறியது குழந் தைகளுக்கு நிச்சயம் ஊக்கத்தை தந்து இருக்கும்.

சிங்கை தீவின் 26 நூலகங் களிலும் தமிழ் புத்தகங்களின் இருப்புகளையும் அதை இந்திய சமூகம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் நூலகச் சேவை களின் தலைவர் திரு. அழகிய பாண்டியன்.

வாசிப்பு விழாவை முன்னிட்டு லிஷா இலக்கிய மன்றம் தேசிய நூலகத்தோடு இனைந்து இன்னும் மூன்று நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

பகல் தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள்

மதிய உணவு உண்ட பின் சிலர் உற்சாகமிழந்து தூக்க கலக்கத் தோடு காணப்படுவதுண்டு.

மேலும் இதன் விளைவாக வேலையில் கவனமின்மை ஏற் பட்டு, பணியைச் சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.

மதிய நேர உறக்கம் ஏற்படுவ தற்கு மருத்துவரீதியான காரணிக ளும் அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன.

மதிய உணவுக்குப்பின் உட லின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது.

இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக் கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழுத் தானிய வகைகளைச் சாப்பிடலாம்.

காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வ தன் மூலமாக சர்க்கரையின் அளவைச் சமநிலைப்படுத்தலாம்.

மேலும் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளை களில் சோர்வு நீங்க நடைப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற் கொள்ளலாம்.

தூக்கத்தைத் தூண்டும் மெல டோனின் ஹார்மோன் அளவு உயர் வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக் கத்திற்கு இன்னோர் காரணமாகி றது.

இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில்படும்படி நடக்கலாம். இவ்வாறு செய்வது வைட்டமின் ‘டி’யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.

குளிரூட்டி வசதியுடைய அலு வலக வேலையானது தண்ணீர்த் தாகத்தைக் குறைத்துவிடும்.

இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர்க் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.

உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங் கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற நீரிழிவு, ரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழ வகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம்.

உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதிப் புரதம் மற்றும் கால் பகுதி முழுத் தானியமாக எடுத்துக் கொள் வதைப் பழக்கமாக்க வேண்டும்.

தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப் பழக்கம், உணவை மென்று உண் ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!