சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புதிய செயலவை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புதிய செயலவை

1 mins read

எழுத்தாளர் கழகத்தின் 21ஆவது பொதுக்கூட்டத்தில் அடுத்த ஈராண்டுக்கான (2019-2021) புதிய செயலவையினர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 30.6.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் சிண்டா சிற்றரங்கில் கூட்டம் நடைபெற்றது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புதிய தலைவராக முன்னைய செயலாளர் திரு. சுப. அருணாசலம் பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக திரு நா. ஆண்டியப்பனும் செயலாளராக திருவாட்டி கிருத்திகாவும் பொறுப்பேற்றனர். புதிய பொருளாளராக திரு. கண. மாணிக்கம், துணைச் செயலாளராக திரு. கோ. இளங்கோவன் ஆகியோர் தேர்வு பெற்றனர். திரு. முத்துமாணிக்கம், திருவாட்டி மலையரசி, திருவாட்டி பிரேமா மகாலிங்கம், திரு. மில்லத் ஆகியோர் செயலவை உறுப்பினர்களாக நீடிக்கும் வேளையில் திரு. ராஜா சண்முகசுந்தரம், திருவாட்டி மணிமாலா மதியழகன் ஆகிய இருவரும் புதிய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.