14ஆம் தேதி 'மேற்கு உதயம்' நிகழ்ச்சி

14ஆம் தேதி 'மேற்கு உதயம்' நிகழ்ச்சி

1 mins read

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் ராஜா, பூன்லே, த ஃபிரான்டியர், தெலுக் பிளாங்கா, வெஸ்ட் கோஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் பைனியர் தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 'மேற்கு உதயம்' எனும் நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்து உள்ளன.

ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்துள்ள ஃபிரான்டியர் சமூக மன்றத்தில் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தி னராக தெலுக் பிளாங்கா தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் திரு லிம் ஹெங் கியாங் வருகை தருவார். அவருடன் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர் களாக திருவாட்டி ஃபூ மீ ஹார், திரு பேட்ரிக் டே, திரு செட்ரிக் ஃபூ ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

ஐந்து தொகுதிகளில் இருந்தும் சுமார் 1,000 குடி­யிருப்பாளர்கள் இந்த நிகழ்ச்­ சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் பங்கேற்பு கட்டணத்தை $3ஆக குறைத்திருக்கிறோம் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்து உள்ளது.