அனைத்து சமயத்தினரும் பங்கேற்ற ரமலான் ஒன்றுகூடல்

இந்திய முஸ்லிம் பேரவையின் சார்பில் பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கத்தில் கடந்த மாதம் 30ம் தேதி மதியம் ரமலான் இன நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் மெல்வின் யோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

“இந்திய முஸ்லிம் பேரவை யின் சார்பில் நடைபெறும் ரம லான் இன நல்லிணக்க ஒன்று கூடல் நிகழ்வில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். பிற இனத்தாரைப் பற்றி ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள இந்நிகழ்வுகள் வழி வகுக்கின்றன.

“அனைத்துப் பிற இன மக்க ளையும் அரவணைத்து ஒற்றுமை யுடன் திகழ வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன நல்லிணக்கமும் முக்கியமான ஒரு காரணமாகும்,” என்று தமது உரையில் கூறினார்.

இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் ஹாஜி முஹம்மது கௌஸ் வரவேற்புரை ஆற்றினார். பென்கூலன் பள்ளிவாசல் இமாம் கிராத் ஓதினார்.

ஏமன் நாட்டுக்கான இலங் கைத் தூதராகப் பதவி உயர்வு பெற்றுள்ள திரு அமீர் அஜ்வத்தைப் பாராட்டிப் பொன் னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அனைத்து சமய மன்றத்தின் பிரதிநிதிகள், இந்து அறக் கட்டளை வாரியம், மெண்டாக்கி, முயிஸ், சிண்டா, ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லம், சிங்கைத் தமிழ்ச் சங்கம், கவி மாலை, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள், இந்திய முஸ்லிம் பேரவையின் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பென்கூலன் பள்ளிவாசல் துணைத் தலைவர் ஹாஜி ரபீக் உள்பட 150க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!