இருபதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கவிமாலை 

இருபதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கவிமாலை அமைப்பின் முதலாவது நிகழ்ச்சி, ஜூன் மாதம் 29ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

போட்டிக் கவிதைகள் பற்றிய பொதுக்கருத்து விவாத அங்கத்தில் இம்மாதம் ‘ஊடகம்’ எனும் தலைப்பிற்கு வந்த 20 கவிதைகளில், 3 கவிதைகள் திரையில் காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டன. கவிஞர் பா. திருமுருகன் இந்த அங்கத்தை வழிநடத்தினார்.

‘கவிதை நூல் கருத்துரை’ அங்கத்தில், கவிஞர் அறிவுமதியின் ‘நட்புக்காக’ கவிதை நூலிலிருந்து சில சிறந்த கவிதைகளைப் பற்றித் தன் பார்வையை விளக்கினார் கவிஞர் பாலமுரு கன்.

அடுத்ததாக, கவிமாலை அமைப்பின் புரவலர் ஜோதி மாணிக்கவாசகம், புலவர் மு.சந்திரசேகர் ஆகியோர் கவி மாலை நிகழ்வின் 20ஆம் ஆண்டுத் தொடக்க நிகழ்வை ஒட்டி வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் தனது உரையில் தலைவர் கவிஞர் இறை.மதியழகன் கவிமாலையை நிறுவிய கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, அதைத் தொடர்ந்து கட்டிக்காத்து வள மாக்கிய புதுமைத்தேனீ மா.அன்பழகன் தற்போதைய செயலவையினர், உதவும் புரவ லர்கள், பத்திரிகையாளர்கள், ஆதரவு நிறுவனங்கள் அனைவரை யும் நன்றியோடு நினைவுகூர்ந் தார்.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூருக் கான இலங்கையின் முன்னாள் துணைத் தூதர் திரு அமீர் அஜ்வத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

திரு அஜ்வத், தமிழ் மொழியைப் பேணுவதன் அவசியத்தையும் அதன்வழி சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்களையும் குறிப் பிட்டார்.

‘செவி நுகர் கவிதைகள்’ என கம்பன் கூறியதை நினைவுபடுத் திய அவர், கண்ணதாசன் போன்ற பெருங்கவிஞர்கள், உணர்ச்சி களை சொற்களால் வடிக்கும் சொல்லாட்சியை தமிழ் மொழி பெற்றிருப்பதை நன்றாகவே உணர்த்தியுள்ளனர் என்றார்.

சிங்கப்பூரில் தூதரகப் பணி முடிந்து, ஓமன் நாட்டில் பணி ஏற்கவிருக்கும் திரு அமீர் அஜ்வத் துக்கு பிரியாவிடை நிகழ்வாகவும் இது அமைந்தது. முதன்முதலாகக் கவிமாலை யில் ‘ஸ்கைப்’ வழி சிறப்புச் சொற்பொழிவைக் கேட்க ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தப் பட்டது.

அதில் தமிழ்ப் படைப்பாளர் பேரியக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கவிஞர் ஜெயபாஸ்கர் சிறப்புரை வழங்கி, தமக்குரிய பாணியில் எளிமையான கவிதை வரிகளை எடுத்துக்கூறியது கவிஞர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!