சிங்கப்பூரில் சினிமா தொடர்பான சந்திப்புகள், கலந்துரையாடல், குறும்படம், திரையிடல் ஆகியவற்றை முன்னெடுத்து வரும் கனவுத்திரை அமைப்பின் ஏற்பாட்டில் வாசிப்பு விழா 2019ன் அங்கமாக 'நாடகம், தொலைக்காட்சி, சினிமா - பயணமும் பார்வையும்' நிகழ்ச்சி கடந்த ஞாயிறு மாலை தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நாடக வரலாற்றைச் சுவைபடக் கூறிய திரு ரெ சோமசுந்தரம், சிங்கப்பூரில் அரங்கேறிய முதல் நாடகம், நாடகக் கலைஞர்கள், நாடக நுட்பங்கள் போன்றவை பற்றிப் பேசினார். 'ஒத்தெல்லோ' நாடகத்தில் அவர் நடித்த இரண்டு நிமிட காட்சியின் காணொளி திரையிடப்பட்டது.
சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறிய திரு ஜெயராம் ராமையா குடும்பச் சூழல், ஏற்று நடித்த நாடகக் கதாபாத்திரங்கள் போன்றவற்றை விவரித்தார்.
மாண-வ-ராக இருந்த காலத்-தில் இருந்தே திரு சோம-சுந்-த-ரம், திரு ஜெய-ராம் ஆகியோரைத் தமது குறும்-ப-டத்-தில் இயக்கி அனு-ப-வம் பெற்-றி-ருந்த இயக்-கு-ந-ரான டான் அர-விந்த் சிங்-கப்-பூ-ரில் சினிமா வாய்ப்-பு-க-ளின் எல்லை பற்-றி-யும் சொந்த செல-வில் படைப்புகளை உருவாக்க வேண்டிய நிலை பற்றியும் குறிப்-பிட்-டார். கலை-ஞர்-க-ளின் தொடர்-மு-யற்-சி-க-ளின் பய-ணம் எவ்-வா-றா-னது என்-பதை அறிய முடிந்-த-தாக நிகழ்ச்-சி-யின் பங்-கேற்-பா-ளர்-கள் தெரி-வித்-த-னர்.

