வாசிப்பு விழாவை முன்னிட்டு, தேசிய நூலக வாரியமும் சிங்கப்பூர் தமிழர் இயக்கமும் இணைந்து தேசிய நூலகக் கட்டடத்தில் இம்மாதம் 14ஆம் தேதி நூலாய்வு நிகழ்ச்சியை நடத்தின. கவிஞர்கள் மா.அன்பழகன், பொன். சுந்தரராஜு, க.து.மு.இக்பால் ஆகியோரது கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஆய்வு செய்து அவை பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 20 போட்டியாளர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
வாசிப்பு விழாவில் மாணவர்களின் நூலாய்வு
1 mins read
போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் (பின்வரிசையில் வலமிருந்து) கவிஞர்கள் பொன். சுந்தரராஜு, மா. அன்பழகன், க.து.மு. இக்பால். கவிஞர்களின் உரையும் இடம்பெற்றது. படம்: தேசிய நூலக வாரியம் -

