வாசிப்பு தினம் 2019

வாசிப்பு தினம் 2019

1 mins read
fba15184-898d-4418-bb64-2026e553edfb
பங்கேற்பாளர்கள். செய்தி, படங்கள்: தேசிய நூலக வாரியம் -

தேசிய நூலக வாரியம், லிஷா, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஆகியவை இணைந்து வாசிப்பு தினம் 2019 என்ற நிகழ்ச்சியை 28 ஜூலை 2019 அன்று தேசிய நூலக வாரியத்தில் நடத்தின. 10 பேர் சேர்ந்து வாசிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உதவி பெறும் மாணவர்களுக்கு 4 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்படி 80 புத்தகங்களை உதவி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதே நிகழ்ச்சியின் மைய நோக்கமாக அமைந்தது.

150ல் இருந்து 200 வாசிப்பு ஆர்வலர்களை ஈர்ப்பது நிகழ்ச்சியின் நோக்கம். ஞாயிற்றுக்கிழமை காலை வேளையாக இருந்த போதும் காலை 10 மணியிலிருந்து 11.30 மணி வரை பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் திரு இரா. காமராசு வாசிப்பின் சிறப்பையும் நன்மையையும் குறித்து சிறப்புரையாற்றினார். 170 பேர் சேர்ந்து வாசித்த அன்றைய நிகழ்வு 80 உதவி பெறும் மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கு உறுதுணையாக அமைந்தது. நிகழ்ச்சி முழுவதும் மாணவர்கள் ஆர்வத்துடன் தமக்கு பிடித்த நூல்களை எடுத்து பெற்றோர்களுடன் அமர்ந்து வாசித்து மகிழ்ந்தனர்.

'வாசிக்கலாம் வாங்க', விடுகதையாம் விடுகதை, இலக்கியச் சாரலும் இன்னிசைத் தூறலும், வாசிப்பு தினம் உள்ளடக்கிய 4 நிகழ்ச்சிகளின் மூலம் 500 மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் வாசிப்பு ஆர்வலர்களை லிஷா, தேசிய நூலகத்தின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்பி உள்ளது.