200 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு

200 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு

1 mins read
1cda5252-f573-480e-b916-630e4234e685
-

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் சிங்கப்பூரின் 200 ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி 200 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்களைத் திரட்டி வருகிறது. அதன் தொடர்பில் எழுத்தாளர்களுக்கு ஏற்கெனவே படிவம் அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை விவரங்களை அனுப்பாத எழுத்தாளர்கள் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் தங்கள் படத்துடன் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுமென கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர்களின் குடும்பத்தினரோ, உறவினர்களோ, நண்பர்களோ அவர்களைப் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்கலாம்.

www.singaporetamilwriters.com எனும் இணையத்தளத்திற்குச் சென்று படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். படிவங்களை aavanna19@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி அல்லது BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723 எனும் முகவரிக்கு அனுப்பலாம்.