சிங்கப்பூரின் வரலாற்றை ஆராயும் பட்டறை

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ (The Arts House) எழுத்துப்பட்டறைகளை ஏற்பாடு செய்து வருகிறது. . 

தேசிய தினத்தை மையமாக கொண்டு கவிஞர் ஹரிணி வி, பிரபல நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன் வழிநடத்தும் பேனாச்சுடர் தமிழ் எழுத்துப்பட்டறை இம்மாதம் 17 ஆம் தேதி நடத்தப்படும். 

குடிமை வட்டாரத்தில் (civil district area) அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று சிங்கப்பூரின் வரலாற்றை ஆராய்வதுடன் சிங்கப்பூரின் வாழ்க்கைமுறை எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்பதையும் இந்த பட்டறை ஆராயும். 

தி ஆர்ட்ஸ் ஹவுஸ் சேம்பரில் (The Arts House Chamber) தொடங்கி, தேசிய கலை காட்சி கூடம், ஆசிய நாகரிக அருங்காட்சியகம், மத்திய தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களுக்கு பங்கேற்பாளர்கள் செல்வார்கள். 

சிங்கப்பூரின் வரலாறு நம் அன்றாட வாழ்க்கையுடன் எவ்வாறு பொருந்துகிறது என்பது பற்றி இந்த இடங்களில் ஆராயப்படும். 

மேல் விவரங்களுக்கு: https://tamilcreativewriting.peatix.com/  நாடலாம்.