ஜெயந்தி சங்கரின் தொகுப்பில் ஆங்கிலத்தில் உலகத் தமிழ்ச் சிறுகதைகள்

ஜெயந்தி சங்கரின் தொகுப்பில் ஆங்கிலத்தில் உலகத் தமிழ்ச் சிறுகதைகள்

1 mins read

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் தொகுப்பில் எமரால்டு பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது 'Unwinding - and Other Contemporary Tamil Stories' எனும் தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு. 10 நாடுகளைச் சேர்ந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைக ளைக்கொண்ட இந்நூலில் ஏழு சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் வாசிக்கத் தெரியாத தமிழர்கள், இந்தியர்கள் பிற இனத்தவர்கள் வாசிப்பதற்கு ஏற்ற இந்த நூலை வெளியிட கிட்டத்தட்ட நான்காண்டு காலம் ஆனதாகக் கூறினார் நூலைத் தொகுத்திருக்கும் ஜெயந்தி சங்கர். பதிப்பாளரைத் தேடுவதற்கே இரண்டாண்டுகள் ஆகின என்ற அவர், நூலுக்கு கிடைத்துவரும் வரவேற்பு நிறைவளிப்பதாக சொன்னார்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகள் பல வந்துள்ளன. அத்தொகுப்புகளில் பெரும்பாலும் புதுமைப்பித்தன், க.நா.சு போன்றவர்களில் தொடங்கி சிலரது கதைகளே திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. அதனால் ஓர் இடைவெளி எப்போதுமே இருக்கிறது. தமிழில் ஏராளமான நல்ல கதைகள் உள்ளன. அவை தமிழ் அறியாத வாசகர்களுக்கு அறிமுகமாக வேண்டும். இடைவெளிகளை இட்டு நிரப்புவதற்கான முதல் படி இது. இந்த முயற்சி தொடர வேண்டும்," என அவர் கூறினார்.

இந்த நூலைப் பெற விரும்புவோர் getpublished@emeraldpublishers.com என்ற மின்னஞ்சலில் பதிப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்.