கோவைத் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சிங்கப்பூர் அமைப்பு

கோவையில் 1956 முதல் செயல்பட்டு வரும் கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூரின் அதன் முன்னாள் மாணவர் அமைப்பின் கிளையைத் துவக்கி இருக்கிறார்கள்.

இம்மாதம் 11ஆம் தேதி  சிங்கப்பூர் ஃப்ளையர் வளாகத்தில் உள்ள பண்டாரி  சஃப்ரான்  உணவகத்தில் நடைபெற்ற துவக்க விழாவில், கல்லூரியின் தற்போதைய முதல்வர் முனைவர் செல்லதுரை சிங்கப்பூர்க் குழுவை துவக்கி வைத்தார். 

1984 ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவரின் 35ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட  சிங்கைக்குத் தங்கள் குடும்பத்தாருடன் வந்திருந்த 116 பேர்களை வரவேற்கும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினராக கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் 'ஃபேர்பேக்ஸ் ஆசியா' குழுமத்தின் தலைவருமான திரு 

இராமசாமி அத்தப்பன் பங்கேற்றார். திரு இறை.மதியழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். 
 

Loading...
Load next