50 பெண்களின் 200 கவிதைகள் அடங்கிய ‘யாதுமாகி’

சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவாக ‘யாதுமாகி’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு கவிமாலை ஏற்பாடு செய்திருக்கிறது.  சிங்கப்பூரில் கவிதைகளை எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் 50 பெண்களின் 200 கவிதைகளைக் கவிஞர் இன்பா இந்நூலில்  தொகுத்திருக்கின்றார். 

செப்டம்பர் முதல் தேதி மாலை 6 மணிக்கு தேசிய நூலக வாரியத்தின் 16வது மாடியில் அமைந்துள்ள The Pod அறையில் வெளியீட்டு விழா நடைபெறும். விழாவில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் (ஓய்வு) முனைவர் சித்ரா வரபிரசாத் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். 

முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன் தலைமையில் ‘இன்று இவர்கள் இங்கே’ என்ற கவியாடல் இடம்பெறுகிறது. இதில் வள்ளுவரின் வாசுகியாக பானு சுரேஷ், கண்ணகியாக கலைச்செல்வி வைத்தியநாதன், மாதவியாக ப்ரியா தனசேகரன், மணிமேகலையாக வீர.விசயபாரதி, ஔவையாராக  சக்திதேவி தமிழ்ச்செல்வன், திரௌபதியாக  வினுதா கந்தகுமார் ஆகியோர் கவிதை படைக்கவிருக்கின்றனர்.  தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் ‘கவிதை கேளுங்கள்’ அங்கம் இடம்பெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேம்பல் லேனில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த 200 வகையான கறிகளின் வாசனை அந்தப் பகுதிக்கு வந்தவர்களின் வாயில் நாவூற வைத்தது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

16 Sep 2019

கேம்பல் லேனில் மணம் வீசிய 200 குழம்பு வகைகள்

ஊடகங்கள் இளையர்களை நெறிப்படுத்துவதாக தீர்ப்பு வழங்கிய நடுவர் திரு செ. ப. பன்னீர்செல்வம் அவர்களுடன் புக்கிட் மேரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு.

15 Sep 2019

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்