யூனோஸில் புது பகல்நேர நடவடிக்கை நிலையம்

யூனோஸ் வட்டாரத்தில் 24 அடுக்குமாடிக் கட்டடங்களில் குடியிருக்கும் 280க்கும் மேலான முதியோர், புளோக் 12 யூனோஸ் கிரசெண்ட்டில் அமைந்திருக்கும் புது பகல்நேர நடவடிக்கை நிலையத்தில் உள்ள வசதிகள் மூலம் பயனடைவார்கள். சன்லவ் இல்லத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த நிலையம், இம்மாதம் 17ஆம் தேதி அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். படம்: சன்லவ்