தன்னம்பிக்கை ஊட்டும் தாய்மொழி

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஔவையார் விழா ஆகஸ்ட் 24ஆம் தேதி எம்டிஎஸ் அரங்கில் நடைபெற்றது.

ஔவையார் விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா பரிசுகளை வழங்கினார்.

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை மையமாகக் கொண்டு வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 412 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 83 மாணவர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

“நம் தாய்மொழிகளிலிருந்து நம்மால் பல பண்புகளைப் பெற முடியும், பண்பாட்டைக் கற்றுக்கொள்ள முடியும். மேலும், அண்டை நாட்டினருடன் சிறப்பாக தொடர்புகொள்வதற்கான தன்னம்பிக்கையையும் சிங்கப்பூரர்களுக்கு தாய்மொழி அறிவு அளிக்கிறது. நம் மாணவர்களை உலகமயமாக்கப்பட்ட உலகிற்கு ஏற்ற திறனுடையவர்களாக வளர்க்கிறோம். நமது ஆசிய மரபுடைமையை நம் தாய்மொழியின்மூலம் வலுப்படுத்துகிறோம். நம் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகளுடன் இணைந்து, மொழியையும் அதன் பண்பாட்டையும் கற்பதற்கான சூழலை தொடர்ந்து உருவாக்கவேண்டும்,” என்று குமாரி இந்திராணி தம் உரையில் கூறினார்.

தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து திருமதி ஸ்வப்னா ஆனந்த் தமிழ்மொழி வாழ்த்து பாடினார். அதையடுத்து, சிங்கப்பூரின் 200 ஆண்டு நினைவலைகளைப் பறைசாற்றும் ஒளிக்காட்சி திரையிடப்பட்டது.

இவ்வாண்டின் விழாவில், சமூகத்திற்கும் நாட்டுக்கும் பங்காற்றிய மூவருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தேசிய கல்விக்கழக ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின் துணைத் தலைவர் (தமிழ்) முனைவர் சீதாலட்சுமி, முன்னாள் கடற்படை வீரரான திரு சுகுமாறன், கடந்த ஆண்டின் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற உயர்நிலை ஒன்று மாணவர் சூர்யா ஆனந்த் ஆகிய மூவருக்கும் அமைச்சர் இந்திராணி ராஜா விருதுகளை வழங்கினார்.

தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவராக பல ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்த முனைவர் சீதாலட்சுமி, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் போட்டிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக தலைமை நடுவராகப் பணியாற்றியவர்.

அவரின் அந்தப் பங்களிப்பைப் போற்றி அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. நாட்டுக்கு ஆற்றிய பங்கிற்காக கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு சுகுமாறனுக்கும் உலக அரங்கில் சிங்கப்பூருக்குப் பெருமை தேடித்தந்ததற்காக சூர்யாவுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. சூர்யா இனிமையான பாடல் ஒன்றைப் பாடிப் பார்வையாளர்களை இசை மழையில் நனைய வைத்தார்.

தமிழகத்திலிருந்து வருகை புரிந்த பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ‘ஔவை எனும் பேரன்பு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஔவையின் அமுதமொழிகள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கைக்கு என்றும் உகந்தவை என்றும் குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். அறம் சார்ந்த சிந்தனையுடன் அறிவு சார்ந்த சிந்தனையும் வளர வேண்டும் என்ற ஔவையின் உயரிய சிந்தனையையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

ஔவையார் கூறிய கருத்துகள் எவ்வாறு இன்றைய வாழ்க்கைக்கு பொருந்துகின்றன என்பதை விளக்கங்களோடு சுவைபட எடுத்துக் கூறினார்.

உரையாடல் போட்டியில் இருவர் அணிகளாக மாணவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளியை சேர்ந்த 10 வயது அட்சயா, “இத்தகைய போட்டிகளில் பங்கெடுப்பதால் மொழிவளம் வளர்கிறது. ஔவையார், திருவள்ளுவர் போன்றவர்கள் எழுதிய பலவற்றைத் தெரிந்துகொள்கிறோம்,” என்று கூறினார்.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்ற புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியை சேர்ந்த 11 வயது ஆதித்யா மகேஷ்வரன், “இந்தப் போட்டியில் பங்கெடுத்ததால் நான் புதிய சொற்களைக் கற்றுக்கொண்டதோடு, ஔவையார் பற்றியும் தெரிந்துகொண்டேன்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!