கந்தவேல் - நாட்டிய நாடகம்

ரிதம்ஸ் ஏஸ்தடிக் சொசைட்டி எனும் கலைப்பள்ளி ‘கந்தவேல்’ எனும் நாட்டிய நாடகத்தை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அடித்தள அமைப்புகள் மன்றத்தில் அரங்கேற்றியது. 

ஒரு மாம்பழத்தால் முருகன், விநாயகர் நடுவில் ஏற்படும் மன வருத்தத்தை விளக்கியதோடு முருகன், வள்ளி, தெய்வானை திருமணத்தையும் விளக்குவதாக அமைந்தது நாட்டியம். இந்த நாட்டிய நாடகத்தில் கிட்டத்தட்ட 25 இளையர்கள் பங்கேற்றனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னையில் உள்ள பாரதிய வித்யாபவன் எனும் அரங்கில் ‘கிருஷ்ணா குருவாயூரப்பா’ எனும் நாட்டிய நாடகத்தையும் இந்தக் குழு அரங்கேற்றியது. குருவாயூரப்பன் கோயில் உருவான கதை அதில் கூறப்பட்டது. அது பெங்களூரு, கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகிய நகரங்களிலும் அரங்கேற்றப்பட்டது.

Loading...
Load next