தமிழில் இரண்டு புதிய செண்பக விநாயகர் துதி

பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள் திருமதி ஐஸ்வர்யா, திருமதி சௌந்தர்யா ஆகிய இருவரது குரலில், ஸ்ரீ செண்பக விநாயகர் பற்றி தமிழில் பாடப்பட்ட இரண்டு பக்திப் பாடல்கள் அடங்கிய இசைவட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் பலபயன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இசைக் கலைஞர் சங்கர் ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இசைவட்டை வெளியிட்டார். 

இந்தியக் கலைஞர்களான திரு இளங்கோவின் வரிகளில் டாக்டர் பாக்யா மூர்த்தி, கிஷன் மூர்த்தியின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல்களுக்கு திருமதி அமிர்தினி, திருமதி மஞ்சு ஆகியோரின் மாணவர்கள் நாட்டியம் ஆடினர்.