எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான இளையர்களின் கச்சேரி ‘எஸ்பெரன்ஸ்’

எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புஉணர்வை அதிகரிக்கும் நோக்கில் ‘புரோஜெக்ட் சுகர்’ எனும் சமூகம் சார்ந்த திட்டப்பணி அமைப்பு இசை, நடனக் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

‘எஸ்பெரன்ஸ்’ எனும் இளையர்களின் இசை, நடனக் கச்சேரி இம்மாதம் 14ஆம் தேதி இரவு 7 முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியில் அமைந்துள்ள அகாப்பி கான்சர்ட் ஹாலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற tinyurl.com/ticketsforconcert என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஏற்பாடுகள், நுழைவுக் கட்டணம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 94594250 என்ற எண்ணில் குமாரி சிந்து மோகனைத் தொடர்பு கொள்ளலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேம்பல் லேனில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த 200 வகையான கறிகளின் வாசனை அந்தப் பகுதிக்கு வந்தவர்களின் வாயில் நாவூற வைத்தது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

16 Sep 2019

கேம்பல் லேனில் மணம் வீசிய 200 குழம்பு வகைகள்

ஊடகங்கள் இளையர்களை நெறிப்படுத்துவதாக தீர்ப்பு வழங்கிய நடுவர் திரு செ. ப. பன்னீர்செல்வம் அவர்களுடன் புக்கிட் மேரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு.

15 Sep 2019

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்