கண்ணதாசன் விழாவை முன்னிட்டு பாட்டுத்திறன் போட்டி

கண்ணதாசன் விழாவை முன்னிட்டு பாட்டுத்திறன் போட்டி

1 mins read

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நவம்பர் 16ஆம் தேதியன்று கவியரசு கண்ணதாசன் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதனை முன்னிட்டு சிறுவர், பெரியவர் என்ற இரு பிரிவுகளுக்கான பாட்டுத்திறன் போட்டியின் முதல் தேர்வுச் சுற்று அக்டோபர் ஆறாம் தேதியன்று நடைபெற உள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் இம்மாதம் 29ஆம் தேதிக்குள் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் www.singaporetamilwriters.com இணையத்தளத்தில் பதிந்துகொள்ளவேண்டும். சிங்கப்பூரில் பணிபுரிவோரும் வசிப்போரும் போட்டியில் பங்கேற்கலாம். போட்டி குறித்து மேல்விவரங்கள் அறிந்திட கழகத்தின் இணையத்தளத்தை நாடவும்.