புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் 'டாண்டியா நைட்' (Dandiya Night) என்னும் கோலாட்ட நடன நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கிட்டத்தட்ட 550 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, வடமேற்கு வட்டார மேயர், டாக்டர் டியோ ஹோப் பின், அவரது துணைவியாருடன் கலந்துகொண்டார். பல்வேறு சுவாரசியமான அங்கங்களுடன் நடைபெற்றது இக்கொண்டாட்டம். பல இன மக்கள் ஒன்று சேர்ந்து வண்ணமயமான இந்திய பாரம்பரிய உடைகளில் பவனி வந்தனர். அத்துடன் சிறுவர் முதல் பெரியவர் வரை நடனமாடித் தங்கள் குதூகல உணர்வை வெளிப்படுத்தினர். இந்தியர்கள் மட்டுமின்றி பல இனத்தவர்களையும் வெளிநாட்டவர்களையும் இணைத்துக் கொண்டாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்று விரும்பினார் புக்கிட் பஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவரான திருமதி கௌசல்யா ராமச்சந்திரா, 78. அந்த எண்ணத்தில் உதித்ததே இந்த 'டாண்டியா நைட்'. நிகழ்ச்சியில் சிறப்பாக நடனம் ஆடியதற்காகவும் மிக அழகான ஆடைகளை அணிந்ததற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன. படம்: புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் வண்ணமய கோலாட்ட குதூகலம்
1 mins read
படம்: புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு -

