சிங்கப்பூரின் வளரும் எழுத்தாளர்களான அழகுசுந்தரம், பிரேமா, மலையரசி, மணிமாலா, பானுசுரேஷ், தமிழ்ச்செல்வி, வினுதா, விஜி, வித்யா, பிரதீபா, மில்லத் அஹ்மது ஆகிய பதினொரு பேர் ஒரே அலைவரிசையில் பயணம் மேற்கொண்டு, பதினொரு மாறுபட்ட சிந்தனை
களைச் சுமந்து, சிங்கையின் மூத்த, வளர்ந்த எழுத்தாளர்கள் புடைசூழ, சிங்கப்பூரின் இருநூற்றாம் ஆண்டு நிறைவையொட்டி முதல் சிறுகதைத் தொகுப்பான, 'கதம்பம் 2.0' நூலை கடந்த மாதம் 25ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் வெளியிட்டனர்.
இந்நூலை இரண்டு பாகங்களாக தொகுத்துள்ள திரு மில்லத் அஹ்மது, சிங்கை உயிர்மெய் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிட்டார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் துணைத் தலைவர் நா.ஆண்டியப்பன் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
முனைவர் எச்.முஹம்மது சலீம், முனைவர் ந.செல்லகிருஷ்ணன், எழுத்தாளர்கள் எம்.சேகர், இமாஜான், இராம வைரவன் ஆகியோர் நூலின் உள்ளடக்கக் கதை
களைப் பல கோணங்களில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்
களுக்கு படைத்தார்கள்.
"சிங்கப்பூர் வாழ்வியல் சூழலில் நவீனத்துவமும் பண்பாட்டுக்
கூடல்களின் கலவையுமாக இணைந்து ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தரும் படைப்புகளாக நவநவமாய் நமது புனைவர்கள் தருகின்ற வல்லமையை இந்த வெளியீட்டில் இடம்பெறும் பதிவுகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன," என்றார் முனைவர் சலீம்.
உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான யாஸிர், வாழ்த்துரையை வழங்கினார். மூத்த எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன் நூல் எழுத்தாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவரும் சமூக ஆர்வலருமான திரு வீ.கலைச்செல்வம் நூல்களை வெளியிட, முதல் மூன்று நூல் பிரதிகளை ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத் தலைவர் எஸ்.ஃபரியுல்லாஹ், தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா, பட்டிமன்றக் கலைக் கழகத் தலைவரான எழுத்தாளர் யூசுப் ராவுத்தர் ரஜித் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.
இந்-நி-கழ்ச்-சிக்கு தேசிய நூலக வாரி-ய-மும் வீ.கலைச்-செல்-வ-மும் ஆத-ர-வா-ளர்-க-ளாக இருந்-த-னர்.

