‘லிட்டில் இந்தியா’வின் ரகசிய கதைகள்

கி. ஜனார்த்தனன்

கிளி ஜோதிடம். கச்சாங் புத்தே. கோலாட்டம். கமகமக்கும் தேநீர் என ஐம்புலன்களையும் கவரக்கூடிய ‘லிட்டில் இந்தியா பற்றிய ரகசியக் கதைகள்’ சுற்றுலா  பங்கேற்பாளர் களை மகிழ்வித்தது. 

சிங்கப்பூரின் கலாசார பன்முகத் தன்மையின்  சின்னமாகத் திகழும் லிட்டில் இந்தியாவின் பின்னணியை விளக்கும் ‘லிட்டில் இந்தியா பற்றிய ரகசிய கதைகள்’ எனும் சுற்றுலா இம்மாதம் 9ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கை யைவிட வெகு அதிகமாக எழுபது பேர் இதில் கலந்துகொண்டனர். இந்திய மரபுடைமை நிலையத்தில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய அவர்களது பயணம் இரவு 7.30 மணிக்கு கிளைவ் ஸ்திரீட்டில் நிறை வடைந்தது.  

சுற்றுலாவின்போது சிங்கப்பூர் சாலைப் பெயர்களின் காலனித்துவ வேர்களை பற்றி விளக்கப்பட்டது.

அப்போதைய சிராங்கூன் துறைமுகத்திற்கு இட்டுச் செல்லும் சாலைக்கு சிராங்கூன் ரோடு என்ற பெயர் சூட்டப்பட்டதை  பங்கேற் பாளர்கள் தெரிந்துகொண்டனர். 

கிளி ஜோதிடம்,  கச்சாங் புத்தே கடையுடன் இந்தச் சுற்றுலா தொடங் கியது. இந்த இரண்டு தொழிலையும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகச் செய்துவந்த திரு என். செல்வராஜு  இச்சுற்றுலாவுக்கெனச் சிறப்பாக வரவழைக்கப்பட்டார். 

“பழைய நினைவுகளை மக்களுக்கு மீண்டும் கொண்டு சேர்க்கும்  இந்தத் தொழில்களைச் செய்வதில் நான் மகிழ்ச்சி அடை கிறேன்,” என்று அவர் கூறினார்.

கிளி ஜோதிடத்தைக் கண்டதும் பழைய நினைவுகள் மீண்டும் தனது மனத்திரையில் மலர்வதாகச் சுற்று லாவில் பங்கேற்ற மக்கள் தொடர்பு ஆலோசகர் கே.பவானி கூறினார்.

“லிட்டில் இந்தியாவின் சந்து பொந்துகளைச் சுற்றிப் பார்த்து கற்றுக்கொள்ளவே இதில் கலந்து கொண்டேன். இளம் வயதில் நான் லிட்டில் இந்தியாவில் கண்டவற்றை  இன்றைய இளையர்களுக்கு இது போன்ற சுற்றுலா வழி காண்பிப்பது முக்கியம்,” என்று அவர் தெரி வித்தார். சுற்றுலாவில் பங்கேற்றவர்களுக் காக பிரத்யேகமாக இந்த இரு தொழில்களும்  ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தபோதும் வழிப்போக்கர்களும் கச்சாங் புத்தே கடையை சூழ்ந்தனர்.

ஆயினும் சுற்றுலாவில் கலந்து கொண்டவர்களுக்காக மட்டுமே அந்தக் கடை அமைக்கப்பட்டதால் அவர்கள் சற்று ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினர்.  

கச்சாங் புத்தே கடைகள் அதிகம் இல்லாதபோதும் அவற்றின் மீதான ஆர்வம் குறையவில்லை என்பதை இது காட்டுகிறது.

பிறகு பஃப்ளோ ரோட்டிலுள்ள காய்கறிகள் கடைகளுக்குச் சென்ற சுற்றுலாக் குழு, இந்தியர்கள் பயன்ப டுத்தும் சமையல் பொருட்களைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

அருகில் கெர்பாவ் ரோட்டில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கோலாட்டம் என பல்வேறு வகையான கிராமிய நடனங்களை ‘ஓம்கார்’ நடனக் கலைஞர்கள் ஆடிக்காட்டினர். 

வழக்கமான சுற்றுலாவைவிட இந்தச் சுற்றுலாவுக்கு இந்த அங்கம்தான் மேலும் சிறப்பு சேர்த்தது என்றார் மொரிஷியஸைச் சேர்ந்த மேக்ஸ்.

“வேலைக்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கிறேன். இதுவரை லிட்டில் இந்தியாவுக்கு ஐந்து முறை சென்று இருக்கிறேன். ஆனால் இப்போது தான் இந்த வட்டாரத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொண்டேன். இதனால் லிட்டில் இந்தியா எனக்கு மிகவும் பிடித்துவிட்டது,” என்று 50 வயது மேக்ஸ் தெரிவித்தார்.

கிளைவ் ஸ்திரீட்டில் பங்கேற்பா ளர்கள் சிலர், வேட்டி கட்டும் அங்கத்துடன்  நிகழ்ச்சி முடிந்தது.

லிட்டில் இந்தியா சுற்றுலாவுக்கு வரவேற்பு அமோகமாக இருந்ததாகத் தெரிவித்த லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமை சங்கம், இது போன்ற சுற்றுலாவை மேலும் பலருக்கு நடத்த வேண்டும் விரும்புவதாகத் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon