சுடச் சுடச் செய்திகள்

பேசும் திறன் வளர்க்கும் முயற்சி

பேசும் கலையை வளர்க்க ஜாலான் புசார் சமூக மன்றத்தில் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து முஸ்லிம் லீக் சிங்கப்பூர் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மொழி இலக்கியப் பிரிவான இளம்பிறை இலக்கிய வட்டம் தளம் அமைத்துள்ளது. 

பேசும் கலை வளர்ப்போம் மன்றத்தின் ஏழாவது நிகழ்ச்சி 21-12-2019 சனிக்கிழமை ஜாலான் புசார் சமூக மன்றத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தக்கலை முஸ்லிம் சங்க தலைவர் திரு. முஹம்மது மீரான் கலந்துகொண்டார்.  

சிறப்புப் பேச்சாளர், திரு ஜோதி மாணிக்கவாசகம் “புன்னகை தரும் பொன் நகை” எனும் தலைப்பில் நகைச்சுவையுடன் தனக்கேயுரிய கலகலப்பான பாணியில் உரையாற்றினார். 

சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் முனைவர் ஹ.மு.நத்தர்ஷா இளம் பேச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உற்சாகமூட்டினார். 

மாணவர்கள் த்ரிநாயன் சுந்தரராமன், சுரேஷ் சர்வேஷ் ஆகியோருடன் திரு சலாஹுதீன், திருமதி அன்னபூரணி, திரு அஷோக் குமார் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் பேசினர். 

இயற்கை உணவு, நான் விரும்பும் பாவேந்தர், மனம்விட்டுப் பேசும் தன்மை, வாழ்க்கை அனுபவங்கள் போன்ற தலைப்புகளில் இவர்கள் பேசினர்.  

நிகழ்ச்சி நெறியாளர் பிலால் மற்றும் நன்றியுரைத்த திரு கார்த்திக் சிதம்பரம் இருவரும் கருத்துக்களை ஒட்டிய சுவாரசிய தகவல்களை மிகப் பொருத்தமாக கூறியது கூடுதல் சுவாரசியம். மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பேசும் கலை  நிகழ்வு இடம்பெறும்.

செய்தி, படம்: ஜாலான் புசார் சமூக மன்றம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon