தாய்-மகள் உறவை மேலும் நெருக்கமாக்கியது

தாய்-மகள் உறவை மேலும் நெருக்கமாக்கியது

1 mins read
1d0b20d4-6a8c-4a4c-b9c9-5810faf47be6
மருத்­து­வப் படிப்பை முடித்து, பயிற்சி பெற்­று­வ­ரும் ஐஸ்­வ­ரியா கிரு­பேஷ், 25, -

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புவோர் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அத்தகைய ஆணைக்கு உட்பட்ட சிலர், அந்த இரு வார காலத்தைக் கழித்த விதம் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

மருத்­து­வப் படிப்பை முடித்து, பயிற்சி பெற்­று­வ­ரும் ஐஸ்­வ­ரியா கிரு­பேஷ், 25, தம் தாயா­ரு­டன் அயர்­லாந்­தி­லி­ருந்து மார்ச் 28 ஆம் தேதி சிங்­கப்­பூர் திரும்­பி­னார். ஆயி­னும், வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ர­வால் இரு­வ­ரும் சுவி­ஸோட்­டல் ஸ்டாம்­ஃபர்­டில் 14 நாட்­கள் தங்க வேண்­டி­யி­ருந்­தது. கிட்­டத்­தட்ட ஆறு ஆண்­டு­க­ளாக அயர்­லாந்­தில் இருந்­து­வ­ரும் குமாரி ஐஸ்­வர்­யா­வைக் காண அவ­ரின் தாயார் கடந்த பிப்­ர­வரி மாதம் அங்கு சென்­றார்.

"தந்­தை­யைக் காண ஆவ­லாக இருந்த நான் உட­ன­டி­யாக வீட்­டிற்­குத் திரும்ப முடி­யாது என்­பதை அறிந்­த­போது வருத்­தம் அடைந்­தேன்," என்­றார் குமாரி ஐஸ்­வர்யா. தாயா­ரு­டன் ஏற்­கெனவே நெருக்­க­மாக இருந்­தா­லும் அவ­ரது விருப்­பங்­க­ளை­யும் வழக்­கங்­க­ளை­யும் பற்றி இந்­தச் சம­யத்­தில் மேலும் கேட்­டுத் தெரிந்து­கொண்­டார் இவர். சக மனி­தர்­களுக்கு இடை­யி­லான தொடர்­பின் அரு­மையை இந்த அனு­ப­வம் தமக்கு உணர்த்­தி­ய­தா­க­வும் இவர் சொன்னார்.