'சூழலுக்கேற்ப வாழலாம்'

'சூழலுக்கேற்ப வாழலாம்'

1 mins read
b2bfc816-8d48-41a5-9e55-12ca51818a06
பெரிய பாத்திரம், தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து அல்லது பச்சைபயிரை கொண்டு தட்டை மொச்சைகளை வீட்டில் வளர்த்து சமையலுக்கு பயன்படுத்தலாம் என்கிறார் திருமதி லலிதா. படம்: லலிதா -

தின­மும் மூன்று வேளை­யா­வது தமது வீட­மைப்புப் பேட்­டை­யில் உள்ள கடைக்­குச் செல்­வார் திரு­மதி நா.லலி­தா­வின் கண­வர். வேலை­யி­லி­ருந்து அவர் ஓய்­வு­பெற்று கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன.

கடைக்­குச் சென்று செய்­தித்­தாள் வாங்­கு­வது, நண்­பர்­க­ளைச் சந்­திப்­பது, விருப்­ப­மான பல­கா­ரங்­களை வீட்­டிற்கு வாங்கி வரு­வது போன்­றவை அவ­ரது அன்­றாட நட­வ­டிக்­கை­களில் அடங்­கும்.

கொவிட்-19 நோய்ப் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான அதி­ர­டித் திட்­டம் நடப்­பிற்கு வந்­த­தி­லி­ருந்து வழக்­க­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­ய­வில்­லையே என்ற விரக்தி அவ­ருக்கு ஏற்­ப­டு­கிறது.

இதற்கு உத­வும் வகை­யில், குறிப்­பிட்ட நேரங்­களில் வாட்ஸ்­அப் காணொளி அழைப்­பு­வழி தம் கண­வரை அவ­ரது நண்­பர்­க­ளு­டன் இணைக்க திரு­மதி லலிதா உத­வு­கி­றார்.

இதன் மூலம் தம் நண்­பர்­க­ளு­டன் எப்­போ­தும்­போல உரை­யா­டும் வாய்ப்பு திரு­மதி லலி­தா­வின் கண­வ­ருக்­குக் கிடைக்­கிறது.

தம் வீட்­டிற்கு அரு­கில் 'பசார் மாலாம்' எனப்­படும் இர­வுச் சந்தை இடம்­பெ­று­வதில்லை என்ற ஏக்­கம் கண­வ­ருக்கு வரும்­போது, அங்கு கிடைக்­கும் உணவு வகை­கள் சில­வற்றை வீட்­டில் சமைக்க திரு­மதி லலிதா முனை­கி­றார்.

"இத்­த­ரு­ணத்­தில் செய்ய முடி­யாத காரி­யங்­களை எண்ணி வருந்­தா­மல் எதை­யெல்­லாம் நம்மால் செய்ய முடி­யும் என்று யோசிக்க ஆரம்­பித்­தால் பல காரி­யங்­களை வீட்­டில் இருந்­த­வாறே செய்­ய­லாம்," என்று தெரி­வித்­தார் திரு­மதி லலிதா, 60.

உதா­ர­ணத்­திற்கு, வீட்­டி­லி­ருந்­த­வாறு தோட்ட வேலை­யில் ஈடு­பட்டு எளிய முறை­யில் தட்டை மொச்­சை­க­ளைப் பயி­ரி­ட­லாம் என்­றார் அவர். அடிக்­கடி பேரங்­கா­டிக்­குச் செல்­லும் அவ­சி­ய­மும் இருக்­காது என்று அவர் கூறி­னார்.

செய்தி: ப. பாலசுப்பிரமணியம்