முதியோரின் மனநலனில் அதிக அக்கறை

கொவிட்-19 கிரு­மித்­தொற்று காரண­மாக இம்­மா­தம் 2ஆம் தேதி­யி­லி­ருந்து தாதிமை இல்­லங்­களில் வரு­கை­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி இல்லை என அறி­விக்­கப்­பட்­டது.

இரு­நூறு படுக்­கை­க­ளுக்கு மேல் கொண்ட வச­தி­க­ளு­டன் இயங்­கும் தாதிமை இல்­லங்­கள் தங்­க­ளது ஊழி­ய­ர­ணி­யைப் பிரித்து, மாற்று இட/பகுதி ஏற்­பா­டு­க­ளு­டன் வேலை­யில் ஈடு­ப­டு­வதை உறு­தி­செய்ய வேண்­டும் என சுகா­தார அமைச்­சும் ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்­பும் அறி­வு­றுத்­தின.

அந்த வகை­யில், ஈசூ­னில் அமைந்­துள்ள ஸ்ரீ நாரா­யண மி‌‌ஷன் தாதிமை இல்­ல­மும் பல நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. அங்கு 212 பேர் தங்­கி­யி­ருக்­கின்­ற­னர்.

இல்­ல­வா­சி­க­ளின் குடும்­பத்­தினர் அங்கு வர அனு­ம­தி­யில்லை என்­பதால் திறன்­பேசி மூலம் காணொளி வழி­யாக இல்­ல­வா­சி­கள், தங்­கள் குடும்­பத்­தி­ன­ரைக் கண்டு உரை­யாட ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கிறது.

அப்­ப­டித் தொடர்­பு­கொள்­ளும்­போது, இல்­ல­வா­சி­க­ளி­டம் நடப்­பிலுள்ள கட்­டுப்­பா­டு­க­ளைப் பற்றி விளக்­கு­மாறு அவர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

தாங்­களும் வெளியே செல்ல முடி­யா­மல், தங்­க­ளின் குடும்­பத்­தாரும் தாதிமை இல்­லத்­திற்கு வர­மு­டி­யாத சூழ­லில் இல்­ல­வா­சி­க­ளின் மன­ந­லத்தை உறு­தி­செய்­வது முக்­கி­ய­மா­கின்­றது.

இதன் கார­ண­மாக, கைய­டக்க மின்­னி­லக்­கச் சாத­னத்­தில் திரைப்­படம் பார்ப்­பது, இசை கேட்­பது போன்ற பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­க­ளோடு வண்­ணம் தீட்­டு­வது, கைவி­னைப் பொருட்­கள் செய்­வது போன்ற இதர நட­வ­டிக்­கை­க­ளி­லும் அங்­குள்ள முதி­ய­வர்­கள் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

அண்­மை­யில் தங்­க­ளது பராமரிப்­புக் குழு­வி­ன­ருக்­காக அங்­குள்ள முதி­ய­வர்­கள் வாழ்த்து அட்­டை­களை­யும் தனித்­து­வ­மிக்க சாவிக்­கொத்­து­க­ளை­யும் உரு­வாக்­கி­னர்.

அடுத்­த­தாக அன்­னை­யர் தினத்­திற்­காக இதர கைவி­னைப் பொருட்­களை உரு­வாக்­க­வும் அவர்­கள் ஆர்­வ­மா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

அவ்­வப்­போது தனிமை உணர்வை அவர்­கள் அனு­ப­விப்­பது இயல்­பு­தான் என்­றா­லும் அதற்­கான சாத்­தி­யத்­தைக் குறைக்­கும் நோக்­கு­டன் அவர்­களைப் பரா­ம­ரிக்­கும் சுகா­தார ஊழி­யர்­கள் பல­ரும் இல்­லத்­தி­லுள்ள தங்­கும் விடு­தி­யி­லேயே வசிக்­கின்­ற­னர்.

தாதிமை இல்­லம் பல பகு­தி­களா­கப் பிரிக்­கப்­பட்டு, ஒவ்­வொரு பகு­தி­யி­லும் குறிப்­பிட்ட பரா­மரிப்பு ஊழி­யர்­களே ஒதுக்­கப்­ப­டு­வதால் தின­மும் அதே பழக்­கப்­பட்ட முகங்­களை இல்­ல­வா­சி­கள் பார்க்­கின்­ற­னர். இத­னால் அவர்­க­ளுக்­கி­டையே ஒரு குடும்­பம் போன்ற நெருக்­கம் உண்­டா­கிறது.

“இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் நமது சுகா­தா­ரத்தை, குறிப்­பாக முதி­யோ­ரின் சுகா­தா­ரத்தை அச்­சு­றுத்தி வரு­கிறது இந்த கொவிட்-19 கிரு­மித்­தொற்று. இவ்­வே­ளை­யில், நமது இல்­ல­வா­சி­களை­யும் சுகா­தார ஊழி­யர்­க­ளை­யும் பாது­காக்­கத் தேவை­யான முன்­ எச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­க­ளை எடுத்து வரு­கிறோம்,” என்று ஸ்ரீ நாரா­யண மி‌‌ஷன் தலைமை நிர்வாக அதி­காரி திரு எஸ்.தேவேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!