42 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சேவை

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தின் 27ஆம் நாளன்று நோன்புத் துறப்புக்கு நோன்புக் கஞ்சி சமைத்து மக்களுக்கு வழங்கி வருகிறார் 74 வயதான ஃபாத்திமா ஹாஜா மைதீன். கடந்த

42 ஆண்டுகளாக உறவினர்கள், நண்பர்கள், வசதி குறைந்தோர் என கிட்டத்தட்ட 50 பேருக்கு இவர் நோன்புக் கஞ்சி வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் ஓய்வெடுக்க வேண்டிய சூழலிலும் அந்தச் சேவையை இவர் விட்டுவிடவில்லை. தம்முடைய பேத்தி ஹபிடா ‌‌‌ஷாவின் உதவியுடன் இவ்வாண்டும் அந்தச் சேவையைத் தொடர்ந்துள்ளார் திருவாட்டி ஃபாத்திமா.