தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் சிறப்புப் பட்டிமன்றம்

‘ஊரடங்கு காலத்தில் நாம் பெற்றதை இழந்தோமா? அல்லது இழந்ததைப் பெற்றோமா?’

இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் நேரம் மாலை 5 மணியளவில் சிறப்புப் பட்டிமன்றம் ஒன்றை தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம் நடத்த விருக்கிறது.

‘ஊரடங்கு காலத்தில் நாம் பெற்றதை இழந்தோமா? அல்லது இழந்ததைப் பெற்றோமா?’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பட்டிமன்றத்துக்கு நடுவராகப் பொறுப்பேற்று நடத்தவிருப்பவர் தமிழகத்தின் புலவர் திரு மா. இராமலிங்கம்.

‘பெற்றதை இழந்தோம்’ என்ற அணியில் தமிழகத்தின் திரு மோகனசுந்தரம், சிங்கப்பூரின் திருமதி அகிலா ஹரிஹரன் ஆகியோரும், ‘இழந்ததைப் பெற்றோம்’ என்ற அணியில் தமிழகத்தின் முனைவர் பர்வீன் சுல்தானா, சிங்கப்பூரின் முனைவர் மன்னை இராஜகோபாலன் ஆகியோரும் பேசவிருக்கிறார்கள். நிகழ்ச்சியைக் காண Zoom ID 869 5450 5522

 

புதிய செயற்குழு

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 10ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் ஸூம் வழியாக இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. அதில் 2020-2021க்கான புதிய செயற்குழு அறிவிக்கப்பட்டது.

கழகத்தின் தலைவர் திரு யூசுப் ரஜித் கடந்த 15 ஆண்டுகள் கழகம் சந்தித்த சில முக்கிய நிகழ்வுகளை விளக்கி, கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு புதிய செயலவையை அறிவித்தார்.

அதன்படி கழகத்தின் புதிய தலைவராக திரு பெருமாள் அருமைச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக திரு சுப்ரமணியன் சண்முகநாதன், திரு முகம்மது சரீஃப் ஹாஜா அலாவுதீன், முனைவர் சையது அப்துல் ரஹீம் சையது நிசார் மூவரும் அறிவிக்கப்பட்டனர்.

முன்னைய தலைவர் திரு யூசுப் ரஜித் கழகத்தின் மதியுரைஞராகவும் முனைவர் ராஜி சீனிவாசன் ஆலோசகராகவும் கழகத்தில் தொடர்கிறார்கள்.