புத்தாக்க இந்தியக் கலையகம், மாறுபட்ட உலகில் இணையம் வழி சிறப்புற வாழும் வழிமுறை விளக்கங்களை உள்ளடக்கிய கலைத்தூரிகை எனும் இணைய பல்சுவை கலைநிகழ்ச்சியை எட்டு பாகங்களாக படைக்கவிருக்கிறது.
இளையர் முதல் அனைத்து வயதினரும் பங்குபெறும் ஆடல், பாடல், நகைச்சுவை அங்கங்களை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிஷியஸ், கனடா, அமெரிக்கா, பிஜி, ஐரோப்பா என பல நாடுகளில் இருந்து படைக்க இருக்கிறார்கள். அதனுடன் அறிவார்ந்த சமூக பேச்சுக்களும் இடம்பெறும்.
முதல் நிகழ்ச்சி யூடியூப் இணைய ஒளிபரப்பில் https://youtu.be/niSIzWyhips வழி காணலாம்.
நிகழ்ச்சியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் guna@pixibit.com.sg எனும் மின்னஞ்சல் வழியாக அல்லது 96601051 எனும் கைபேசி எண்ணிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

