மெய்நிகர் பாணியில் எளிமையான உடற்பயிற்சி குறிப்புகள்

மெய்நிகர் பாணியில் எளிமையான உடற்பயிற்சி குறிப்புகள்

1 mins read
3a4468c7-4335-4cbe-bfc4-229fd0bf36d2
-

மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கேலாங் சிராய் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு, ஃபேஸ்புக் லைஃப்' அம்சத்தைப் பயன்படுத்தி உடற்பயிற்சிக் குறிப்புகளை வழங்கியது.

'ஆரோக்கியமாக இருங்கள்; முனைப்பாக இருங்கள்' என்ற கருப்பொருளில் அமைந்த அந்நிகழ்ச்சியில், வசந்தம் தொலைக்காட்சி பிரபலமான திரு அலாவுதீன் அலி கலந்துகொண்டு, எளிமையான உடற்பயிற்சிக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார். அவருடன் நற்பணிக் குழு உறுப்பினர்கள் திரு மலீக் கே.எஸ் மற்றும் திரு சுரேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். எல்லா வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை மூவரும் செய்து காட்டினர். ஒருவரது மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மேலும் அதிகமான இந்தியர்கள் முன்வர வேண்டும் என்று நற்பணிக் குழுவின் துணைத் தலைவராகவும் உள்ள திரு மலீக் குறிப்பிட்டார்.